திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மணக்கடவு பகுதியில் பழனியில் திருமணம் முடித்துவிட்டு தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த காரும் கோவையில் இருந்து பழனி நோக்கி சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியும் நேற்று மாலை நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே கோவைபெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தமிழ்மணி மற்றும் சித்ரா (கணவன் மனைவி) மேலும்தாராபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தபாலகிருஷ்ணன் மற்றும் செல்வராணி (கணவன் மனைவி) மேலும் திண்டுக்கல் டவுன் ஹால் பகுதியைச் சேர்ந்த கலாராணி ஐந்து பேர் உயிரிழந்தனர் இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை தாராபுரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை தமிழக முதலமைச்சர் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்த நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவராஜ் மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சாலை விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர் மேலும் இறந்தவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் சோகத்துடன் நின்று கொண்டிருந்த காட்சி காண்போரை கண் கலங்கச் செய்தது மேலும் அஞ்சலியின் போது தாராபுரம் நகர மன்ற தலைவர் பாபு கண்ணன் தாராபுரம் ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார் தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட பலர் இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.