வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இன்று ஆர்எஸ்எஸ் பேரணி உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி  நடைபெற்றது. குடியாத்தம் நெல்லூர்


பேட்டை கருப்புலீஸ்வரர் ஆலயத்தில் இருந்து கிளம்பிய பேரணி காந்தி சவுக், நேதாஜிசவுக், குடியாத்தம் கங்கை அம்மன் கோயில், அர்ஜுன முதலிதெரு, பழைய பஸ் நிலையம், அண்ணாதெரு, காங்கிரஸ் ஹவுஸ் ரோடு வழியாக காட்பாடி சாலை சென்று புதிய பஸ் நிலையத்தை அடைந்தது.

 அங்கு ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர் பேரணியை நெல்லுர்பேட்டை கருப்புலீஸ்வரர் ஆலய அறங்காவலர் குழுதலைவர் எம்கே. பொன்னம்பலம் கொடிஅசைத்து துவக்கி வைத்தார்.

 பேரணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு நடவடிக்கைக்காக வேலூர் மாவட்ட எஸ்பி. மணிவண்ணன் தலைமையில் 5 டிஎஸ்பிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பேரணி சரியாக மாலை 3 மணிக்குதொடங்கி பொதுக்கூட்ட மேடையை 3.45மணிக்கு வந்தடைந்தது. பின்னர் 5:45 மணிவரை பொதுக்கூட்டம் நடைப்பெற்றது

Previous Post Next Post