பவானிசாகர் அருகே, ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில், பழங்குடி மக்களுக்கான சிறப்புமருத்துவ முகாம். நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.


ஈரோடு மாவட்ட காவல்துறை மற் றும் ஈரோடு மாவட்ட நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவு, ஈரோடு கிழக்கு அரிமா சங்கம் இணைந்து நடத்தும் போலீஸ் மற்றும் பொதுமக்கள் நல் லுறவை மேம்படுத்தும் வகையில், பவானிசாகர் அருகே ,பழங்குடி மக்கள் வசிக்கும் நந்திபுரம் (எ) கூலி துறை பட்டி,கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் சிறப்பு பொது மருத்துவ முகாமினை, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் இ.கா.ப.தலைமையேற்று துவக்கி வைத்தும், மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தார்.

முகாமில் சத்தியமங்கலம் காவல் உட்கோட்டஉதவிகாவல்கண்காணி  ப்பாளர் அய்மன் ஜமால் இ.கா.ப ,ஈரோடு கிழக்கு அரிமா சங்க நிர் வாகிகள், மருத்துவர்கள், பவானி சாகர் காவல் ஆய்வாளர் பிரபாகரன் நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவு போலீ சார்,அதிகாரிகள்,மலைவாழ் மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Previous Post Next Post