மீனவர்கள் போராட்டம் : தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் இடமாற்றம்.!


 மீனவர்கள் போராட்டம் : தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் இடமாற்றம்.!


தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்கு னர் தலைமையில் கடந்த 3ம்தேதி நடந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகுகளுக்கு பச்சை வர்ணம் அடிக்க வேண்டும். படகுகளுக்கு இன் சூரன்ஸ் கட்ட வேண்டும். படகுகளுக்கு மீன்பிடி உரிமம் பெற அப்போது தான் டீசல் மானியம் கிடைக்கும் என்று உதவி இயக்குனர் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார். இதனால் நாட்டுப்படகு மீனவர் சங்க நிர்வாகிகளுக்கும், அவ ருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து நாட்டுப் படகு மீனவர்கள் அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 6ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் அளித்தனர். பின்னர் திரேஸ்புரத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். 


அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மீனவர் சங்க செயலாளர் ரீகன் :-


"தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் நாட்டுப் படகுகள் உள்ளது. தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குநர் மோகன்ராஜ் என்பவர் மீனவர்களை அவமதிப்புடன் நடத்தி வருகிறார். மீனவர்களுக்கு உண்டான தேவையை தேடி சென்றால் மரியாதை குறைவாக நடத்துகின்றார்.


ஒரு கோரிக்கைகாக சென்றால் வெகு நேரமாக காக்க வைத்து விட்டு, இதை செய்து தர முடியாது. இப்படி தான் செய்வேன் என்று கூறுகிறார். மேலும் கடந்த 3 ஆம் தேதி மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் எங்கள் கோரிக்கைகளை ஏற்காமலே, வெளியே செல்லுங்கள் என்று அவமரியாதையாக கூறுகிறார்.


இதற்கு முன்பு இருந்த மீன்வளத்துறை அதிகாரிகள் எங்கள் குறைகள் துன்ப, துயரங்களை அறிந்து எங்களுக்காக செயல்பட்டனர். ஆனால் இவர் தனது ஆதிக்க சக்தியை வேண்டுமென்றே எங்களிடம் காட்டுகிறார். ஆகவே, மாவட்ட நிர்வாகம் இவரை மாற்றம் செய்ய வேண்டும். மாற்றம் செய்யவில்லை என்றால் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டமானது, காலவரையற்ற போராட்டமாக நீடிக்கும்.


இதுபோன்று அதிகாரிகள் மாற்றம் செய்யக்கோரி இதுவரை போராடியதில்லை. இவரை மாற்றம் செய்யக்கோரி தற்போது முதல் முறையாக போராட்டம் நடத்துகிறோம். மேலும், இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வதால் கிட்டத்தட்ட மாவட்டம் முழுவதும் கோடிக்கணக்கான அளவில் வருவாய் இழப்பு ஏற்படும். மீன் விலை அதிகரிக்கும். அதனால் சுமார் 1.30 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.


தகவலறிந்து அங்கு சென்ற அமைச்சர் கீதாஜீவன் மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உதவி இயக்குநரை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.


இந்நிலையில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன்ராஜ் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அதன்படி தூத்துக்குடி மற்றும் மீனவர் நல உதவி இயக்குனராக பணியாற்றி வந்த விஜயராகவன், தூத்துக்குடி மீன்பிடி துறைமுக உதவி இயக்குனராகவும், நெல்லை மீன்வளம் மற்றும் மீனவர் நல உதவி இயக்குனர் ஷப்னம், தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நல உதவி இயக்குனராகவும், தூத்துக் குடி மீன்பிடி துறைமுக மீன்வள உதவி இயக்குனர் மோகன்ராஜ். நெல்லை மீன்வளம் மற்றும் மீன வர் நல உதவி இயக்குனராகவும் பணியிட மாற்றம் செய்து மீன்வளத்துறை இயக்குனர் உத்தரவிட் டுள்ளார்.

Previous Post Next Post