தூத்துக்குடி : கொட்டும் மழையில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு


 தூத்துக்குடி : கொட்டும் மழையில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

தூத்துக்குடி பாளை ரோடு பகுதியில் மழை நீரை அகற்றுவது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி  ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பாளை ரோடு மற்றும் அதின் எதிர்புறம் உள்ள  பகுதிகளில் இன்று பெய்த கனமழை தொடர்பாக சாலையின் ஓரத்தில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றுவது குறித்தும் வரும் காலங்களில் சாலையின் ஓரத்தில் நீர் தேங்காமல் இருப்பது குறித்தும் கொட்டும் மழையில்  மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். 


மேலும், மழைநீரை சேகரிக்கும் வகையில், பாளை., ரோட்டில்உள்ள வஉசி கல்லூரி அருகே குப்பை கிட்டங்கியில் செயற்கை குளம் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், திமுக செயற்குழு உறுப்பினர் சி.எஸ்.ராஜா ஆகியோர் உடன் சென்றனர்

Previous Post Next Post