ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கலிங்கியம்பழைய வள்ளியம்பாளையம் உப்பு கிணறு மேடு ஸ்ரீ மஹாகணபதி,ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
முன்னதாக அக்டோபர் 29ந்ஆம் தேதி பவானி கூடுதுறையில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது,
அதனைத் தொடர்ந்து 30ந் தேதி ஸ்ரீ கணபதி பூஜை புண்யாகவாசனம்.கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், 108 ஹோமம் நடைபெற்றது. 31ந் தேதி பூதசுத்தி, மண்டப பூஜை, வேதிகை ஆராதனை, யந்திரம் பிரதிஷ்டை, சுவாமி பிரதிஷ்டை, நடந்தது,
நவம்பர் 1ந்தேதி இன்று காலை நாடி சந்தனம், யாத்ராதானம்,யாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்பட்டு திருகோபுரம் வந்தடைந்து
கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேக புனிதநீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது. இதனையடுத்து
ஸ்ரீ மகா கணபதி. ஸ்ரீமாகாளியம்மன் மூலஸ்தானம் மஹா கும்பாபிஷேம் நடைபெற்று அலங்காரம், தசதரிசனம், கோ பூஜை அலங்கார பூஜை மஹா தீபாரதனை நடைபெற்றது.கும்பாபிஷேகத்திற்கு வருகை புரிந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினரும்
,ஊர் பொதுமக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர்.
எம்.மாரிச்சாமி
9080602161