ஈரோடு மாவட்டம். சத்தியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்தியமங்கலம் நகராட்சி அரியப் பம்பாளையம் பேரூராட்சி, கோண மூலை ஊராட்சி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய அனைத்து இடங்களி லும் சுமார் 250 சிசி டிவி கேமராக் கள் பொருத்தும் பணி நிறைவுற்று, அதன்செயல்பாடுகளை சத்தி புதிய பேருந்துநிலையகட்டுப்பாட்டுஅறை யிலிருந்து, கண்காணிப்பு பணி யினை துவக்கும் நிகழ்வாக, அதன் துவக்க விழா,ஈரோடுமாவட்டகாவல் கண்காணிப்பாளர் ஜவகர் இ.கா.ப தலைமையில், சத்தி எஸ் பி எஸ் சந்திப்பில் துவக்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில்,சத்தியமங்கலம் உட்கோட்டகாவல்உதவி கண்காணி ப்பாளர் அய்மன் ஜமால் இ.கா.ப. மற்றும் சத்தி நகர மன் ற தலைவர் ஜானகி ராமசாமி, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன் றியக்குழு தலைவர் கே.சி.பி. இளங்கோ மற்றும் கோண மூலை ஊராட்சி மன்றததலைவர் குமரேசன் (எ) செந்தில்நாதன், அனைத்து வணிகர் சங்க தலைவர் ஜவகர், வெற்றி நர்சிங் கல்லூரி இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்ட நகரின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலை யில், துவக்க விழா நடைபெற்றது
இதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், ஈரோடு மாவட்டம் முழுவதும், இது போன்று சிசி டிவி கேமரா பொருத் தும் பணி விரிவு படுத்தபடும் என் றும், இதனால் குற்றம் சம்பவங்கள் தடுக்கப்படும். மேலும் குற்றம் புரிய துணிபவர்களுக்கு கேமரா பதிவு குறித்து அச்சம் ஏற்படும் என்றும், இதன்மூலம் குற்றவாளிகளை உடனுக்குடன் கைதுசெய்ய வாய்ப் பாய் அமையும் என்றும், விபத்து குறித்த விபரங்கள்,கண்காணிப்பு தேவைப்படும் விபரம் ஆகியன கண்டறிய இது உதவும் என்றார். மேலும்,ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலம் புலிகள் காப்பகபகுதியில் ,நக்சலைட் ஊடுருவல் இல்லை என்றும், மலைப் பகுதியில் நக்ச லைட் ஊடுருவல் தடுக்க, பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்டு தடுப்பு தனிப்பிரிவு போலீசார், கண்காணி ப்புபணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் மலை கிராமங்களில், போலீ சார், பொது மக்கள் நல்லுறவுமுகாம் அமைத்து புதிய நபர் வருகை குறி த்து கண்காணித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் தீபா வளி பண்டிகை ஒட்டி, மக்கள் அதி கம் கூடுமிடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து,போலீசார் குற்ற தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில பாதைகளில் போக்கு வர த்து மாற்றமும் செய்யப்படுகிறது என தெரிவித்தார்.
சி.சி.டி.வி கேமராக்களஅமைக்கும் முயற்சியை சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் எஸ். முருகேசன் சத்திய மங்கலம் பகுதி வணிகர்கள், கல்வி யாளர்கள், நன்கொடையாளர்கள், சமூக எண்ணம் படைத்தோர், அரசு துறைகள் என அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்திருப்பது குறிப்பிட்டதக்க ஒன்றாகும்.