*முதல்வர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சியால் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கனவு நினைவாகின்றது!* *சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நன்றி பாராட்டு!* தமிழ்நாட்டில் எண்ணற்ற இளைஞர்கள் படித்து விட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் வேலை வாய்ப்புகள் இன்றி பல ஆண்டுகளாக தவித்து வந்த நிலையில் புதிய வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சராக மு. க. ஸ்டாலின் கடந்த 2021ல் பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் மேற்கொண்டு வருகிறார். அரசுத் துறையில் முறையாக அறிவிப்புகள் செய்யப்பட்டு தேர்வுகள் நடத்தியும், நேரடியாகவும் ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் பல்வேறு துறைகளில் நிரப்பப்படுவதை தொடர்ந்து பார்த்து வரும் நாம், தற்பொழுது தனியார் துறையிலும் குறிப்பாக கடந்த ஆண்டு 2022 நவம்பர் 28ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய காலணி தொழிற்சாலை ஓராண்டில் அதே நாளில் தனது உற்பத்தியை துவக்கிடும் சாதனை நற்செய்தியை அனைத்து ஊடகங்களிலும் நாளேடுகளிலும் பார்க்கின்ற பொழுது நமது தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பு என்னும் கனவு நினைவாக தொடங்கிவிட்டது என்னும் நம்பிக்கை ஒளி பிறந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளைஞர்களின் மீது தனிக் கவனம் செலுத்தி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்குடன் தொலைநோக்குப் பார்வையில் தொழில் துறை சார்ந்த பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி, ஒற்றைச் சாளர முறை என்னும் நிலையை உருவாக்கி புதிய தொழில் கொள்கையையே வரையறுத்து இந்தியா மட்டுமல்லாமல், சிங்கப்பூர் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு நேரடியாக சென்று பெரும் தொழில் நிறுவன தலைவர்களை சந்தித்து அழைப்பு விடுத்ததன் அடிப்படையில் குறிப்பாக மிகவும் பின்தங்கிய பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சிப்காட் வளாகத்தில் கோத்தாரி பீனிக்ஸ் காலணி உற்பத்தி இத்தொழிற்சாலைக்கான அடிக்கல்லை 2022ல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாட்டினார். சென்னை, கோவையைச் சுற்றியே தொழிற்சாலைகளை உருவாக்கி வந்த நிலையில் வளர்ச்சி பரவலாக இருக்க வேண்டும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பரவலாக கிடைக்க வேண்டும், சமூகப் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்னும் உயரிய நோக்கில் மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதியான பெரம்பலூரில் பீனிக்ஸ் கோத்தாரி காலணி தொழிற்சாலை ஒரு வருட சாதனை நேரத்தில் கட்டப்பட்டுள்ளது. இது பீனிக்ஸ் கோத்தாரியின் அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கு சான்றாக அமைந்துள்ளது. மேலும் சமூக அக்கரைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி தலைவர் ஜே.ரஃபிக் அகமது, இத்தொழிற்சாலையின் வாயிலாக முதற்கட்டமாக நானூறு கோடி ரூபாயில் 4000 பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர் என்றும், வளர்ச்சியற்ற பெரம்பலூர் பகுதியில் பெரும் மாற்றத்தையும் ஏற்றத்தையும் ஏற்படுத்தும் என்பது உறுதி என்றும்.2028 ஆம் ஆண்டுக்குள் சுமார் 29500 நபர்களுக்கு இந்நிறுவனம் வேலைவாய்ப்பினை வழங்க உறுதியளித்திருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தில் வேலைவாய்ப்பு பதிவு செய்து காத்திருக்கின்ற 90 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களில் 30% சதவிகிதத்தினரின் எதிர்காலம் இந்த ஒரு நிறுவனத்தாலேயே பூர்த்தி செய்யப்பட உள்ளது என்பதை அறிந்தும் இன்னும் பல தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்டுள்ள காரணத்தினால் நம்முடைய தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவு நிச்சயமாக அடுத்தடுத்து நிறைவேறி இன்னும் ஒரு சில
ஆண்டுகளில் முழுமையாக தன்னிறைவு பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்பது நிதர்சனமான உண்மை. ஆகவே வேலைவாய்ப்பின்மை என்னும் நிலை இனி தமிழகத்தில் இல்லாத ஒரு நிலையை நாம் எட்டுவதற்கு அனைவரும் மாற்றுக்கருத்தின்றி அரசுக்கும் தனியார் துறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதே நம்முடைய தற்போதைய கடமையும் வேண்டுகோளுமாகும். ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது ஒருங்கிணைந்த அனைத்து பகுதிகளின் வளர்ச்சியே காரணமாக அமையும் என்று சொல்வார்கள். அந்த விதத்தில் தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட தொழிற்சாலைகள் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்படுகின்ற பொழுது பொருளாதாரத்தில் ஏற்றமடைந்து சமூக முன்னேற்றம் கண்கூடாக குறுகிய காலத்திலேயே அடையலாம் என்பது உறுதி. இத்தகைய செயல்பாடுகளுக்கு எத்தகைய இடையூறும் செய்யாமல் அனைவரும் இணைந்து கைகோர்த்து தமிழகத்தின் வளர்ச்சி என்னும் ஒரே சிந்தனையில் முன்னேறுவோம். தமிழ்நாடு தழைத்தோங்கு தொடர்ந்து பணியாற்றுவோம் முதல்வர் மு.க.ஸ்டாலினின்இத்தகைய செயலுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிப்போம் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம்தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.