2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்த கூட்டணி இருக்காது . என்று சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இன்னும் சாதிய வன்கொடுமைகளில் வளராத மாநிலங்களில் எவ்வாறு உள்ளதோ அதேபோல் தமிழகத்தில் இருப்பது கண்டிப்பாக ஆச்சரியம் மட்டுமல்ல அதிர்ச்சியும் அளிக்கிறது இதற்கு மிக கவனமாக பொதுமக்கள் அரசியல்வாதிகள் தொலைக்காட்சி நிறுவனங்கள் இணைந்து தான் இந்த ஜாதி எனப்படும் கொடிய செடியினை ஒழிக்க வேண்டும்.
ஒவ்வொரு முறையும் பேசிக்கொண்டு சென்று விடுகிறோம் ஒரு மூன்று மாதத்திற்கு பிறகு பார்த்தால் இதைவிட கொடுமையாக மற்றொன்று நடக்கிறது அதனால் இதை கண்டிப்பதோடு நிறுத்தி விடாமல் இதற்கு பின்னால் யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்
மணிஷ் சிசோடியா கைது முதல் கைது குறிப்பாக மதுபான ஊழல் வழக்கில் தற்போதைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெளிவாக கூறியிருக்கிறது. அவர் மீது தவறு இருப்பதாக தெரிவிக்கிறது அதனால் அவருக்கு பினை கொடுக்க முடியாது வழக்கு விசாரணையை விரிவாக முடியுங்கள் எனக் கூறியுள்ளது.
இதிலிருந்து நமக்கு தெளிவாக தெரிகிறது மணிஷ்சிசோடியா கைது பொருத்தவரை அவருக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளது அதேபோன்று அந்த வழக்கில் தொடர்பு உள்ளவர்களோ அதே போன்று குற்றத்தில் ஈடுபட்டவர்களையோ அமலாக்கத்துறை என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுக்கும் அதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதே நேரத்தில் அந்த வழக்கில் ஆதாரம் இருப்பதாகவும் தெரிகிறது தவறு செய்யாத முதலமைச்சர் ஏன் பயப்பட வேண்டும் ஏன் பயந்து இவ்வாறு பேச வேண்டும்.
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார் அவர் IND கூட்டணியில் இல்லாதவர் அவருக்கும் பாஜகவுருக்கும் சம்பந்தமே இல்லை ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் சந்திரபாபு நாயுடுவை கைது செய்துள்ளார்கள் இதை பற்றி யாரும் பேசுவதில்லை இந்தியாவை பொருத்தவரை தவறு செய்யும் போது அந்தந்த அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.
பாரத ஜனதா கட்சி மட்டும் தான் நடவடிக்கை எடுக்கிறது என எதிர்க்கட்சி நண்பர்கள் கூறுவது பொய் மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை
மத்திய பிரதேசத்தில் அகிலேஷ் யாதவர் அவர்களின் கட்சிக்கு சீட் கிடைக்கவில்லை ரொம்ப கடுமையான சில வார்த்தைகளை பயன்படுத்திருக்கின்றார்.
அதே போன்று இந்த கூட்டணியானது சரியான கூட்டணி அல்ல உறுதியான கூட்டணியும் அல்ல இது பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கலையுமா அல்லது சட்டமன்ற தேர்தலுக்கு முன் கலையுமா என்பதுதான் உண்மை.
மோடி வெறுப்பு என்ற ஒரே கொள்கையினை கொண்டு இந்த கூட்டணி அமைந்துள்ளதால் டிசம்பர் மூன்றாம் தேதி இதற்கு ஒரு முடிவு வரும் நரேந்திர மோடியை எதிர்த்து எத்தனையோ கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளனர்.
இது நடக்கும் பொழுது பாரதிய ஜனதா கட்சி ராஜஸ்தான் மத்திய பிரதேசம் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பிடித்திருக்கும் அன்று நடக்கப்போகும் விரிசல் என்பது 2026 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்த கூட்டணி இருக்காது என்பதை நான் உறுதியாக கூறுகிறேன்.
1823 நமது தமிழர்கள் இந்தியாவிலிருந்து முதல்முறையாக ஆங்கிலேயர் தமிழகத்திலிருந்து தமிழர்களை எங்கு அழைத்து செல்கிறோம் என்றே கூறாமல் இலங்கைக்கு வேலைக்காக சென்றார்கள் ரப்பர் தோட்டம் தேயிலை தோட்டம் போன்ற வேலைக்காக நிறைய பேர் எங்கு போறோம் என்று தெரியாமல் இங்கு இருந்த ஆங்கிலேயர்கள் ஸ்ரீலங்கா அழைத்துச் சென்றதும் உண்டு அந்த கொடூரமான பயணத்தில் இலங்கையினுடைய மத்திய பகுதிக்கு சென்று அங்கேயே தங்கி வேலைகளை செய்து ஒரு இலங்கையை உருவாக்க தொடங்கினார்கள்.
இன்று இருக்கும் இலங்கைக்கு தமிழர்கள் தான் காரணம் அவர்களை மலையக தமிழர்கள் என கூற ஆரம்பித்தார்கள் இன்று இலங்கைக்கு சென்றாலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இருப்பவர்கள் மலையக தமிழர்கள் தான்.
அவர்கள் இன்னும் பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பதோடு மலைப்பகுதிகளில் வாழ்ந்ததால் மலையக தமிழர்கள் என அழைக்கப்பட்டனர் வாஜ்பாய் காலத்திலேயே அவர்களுக்கான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தற்சமயம் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நேரடியாக சென்று அவர்களை சந்தித்துள்ளார் இன்று 200 வருடங்கள் ஆகி உள்ளது அவர்கள் இலங்கை சென்று அந்த 200 வது வருடங்களை கொண்டாடுவதற்காக இலங்கை அரசு ஒரு பெரிய விழா எடுக்கிறார்கள் 25 ஆயிரம் மலையக தமிழர்கள் கலந்து கொள்ளும் விழாது அதில் இலங்கை அதிபர் நமது நிர்மலா சீதாராமன் மேலும் சில அரசியல் தலைவர்களையும் அழைத்துள்ளனர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக நானும் செல்ல உள்ளேன்.
இது அனைவருக்கும் பெருமை இது அனைத்து தமிழர்களுக்கும் பெருமை ஒரு தமிழகத்தில் இருந்து ஒரு நாட்டிற்கு சென்று அங்கு அந்த நாட்டுக்கான கட்டமைப்புகளை அமைத்து அவர்களுக்கு விழா எடுக்கிறார்கள் என்றால் அது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம் இங்கிருந்து முக்கியமாக யார் யார் இலங்கை தமிழர்களை பற்றி பேசுகிறார்களோ அவர்களையும் அழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அரசு தமிழர்கள் அனைவருக்கும் தொடர்ந்து ஒத்துழைப்பாக இருக்கும் என உறுதி அளிக்கிறேன் நான் யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்பேன் மக்களுக்கு முன்னேற்றத்திற்கான ஆலோசனைகள் கூறுங்கள் யாரும் அரசியலுக்கு வருவதை யாரும் தடையாக இருக்க முடியாது.
மக்களுக்கு ஒன்றுக்கு அதிகப்படியான வாய்ப்பு இருப்பது நல்ல விஷயம் தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் புதியவர்கள் அரசியலுக்கு வந்தால் தான் இங்கு இருக்கும் நடைமுறை மாறும் பழைய 30 வருடம் 40 வருடம் ஆட்சியில் இருக்கும் பொழுது ஒரே மாதிரியாகலனத்தான் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் நடிகர் விஜய் உட்பட அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும் மக்கள் யாரை ஏற்றுக் கொள்வார்களோ அவர்களை ஏற்றுக் கொள்ளட்டும்