கூடுதல் விலைக்கு சரக்கு விற்பனை... தட்டி கேட்டவருக்கு சரக்கு கிடையாதாம்... தரமணியில் தான் இந்த அக்கிரமம்

 சென்னை, தரமணி டாஸ்மார்க் கடையில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்பனை தட்டிக்கேட்ட வாடிக்கையாளருக்கு மது விற்பனை இல்லை என கூறி கடைக்காரர் மதுபாட்டிலை வாங்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

சென்னை தரமணி 100 அடி சாலை, அம்மா உணவகம் அருகில் அரசு டாஸ்மார்க் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் வாடிக்கையாளர் ஒருவர் மதுபாட்டில் ஒன்றை கேட்டு 150 ரூபாய் பணம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக் கொண்ட டாஸ்மார்க் விற்பனையாளர் மதுபாட்டிலை வாடிக்கையாளரிடம் கொடுத்து விட்டு மீதி 10 ரூபாயை கொடுத்துள்ளார். 

அதற்கு வாடிக்கையாளர் மதுபாட்டிலில் எம்.ஆர்.பி. அதிகபட்ச விலையே 130 தான் போட்டுள்ளது, நீங்கள் ஏன் கூடுதலாக 10 ரூபாய் எடுத்துள்ளீர்கள், அந்த பணத்தை திரும்ப கொடுங்கள் என கேட்க, ஆத்திரமடைந்த டாஸ்மார்க் விற்பனையாளர் அந்த பணத்தை கொடுங்கள் என கூறி வாங்கிக் கொண்டு, மதுபாட்டிலையும் எடுத்துக் கொண்டு 150 ரூபாயை திரும்ப கொடுத்து விட்டார். 

இஷ்டம் என்றால் வாங்கி இல்லையென்றால் கிளம்பு என மிரட்டிம் தொணியில் பேசி மதுபாட்டில் இல்லை என கூறி வாடிக்கையாளரை அனுப்பி விட்டார். அவரும் ஏமாற்றத்தோடு புலம்பிக் கொண்டே சென்று விட்டார். 

மதுவிலக்கு துறை அமைச்சர் ஒரு பக்கம் கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை பாயும் என உத்தரவிடுகிறார். மறுபக்கம் தரமணி டாஸ்மார்க் கடையில் கூடுதல் விலை கொடுக்கவில்லை என்றால் மதுபாட்டில் விற்பனையே இல்லை என்கிறார் விற்பனையாளர் மீது அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா இல்லை கமிஷன் பெறப்படுகிறதா என்ற ஐயம் மேலோங்குகிறது.

Previous Post Next Post