மயிலாடுதுறையில் தீபாவளியை முன்னிட்டு மக்கள் அதிகமாக வரும், மணிக்கூண்டு வழியாக பேருந்துகளை இயக்காமல் உடனே போக்குவரத்தில் மாற்றம் செய்திட சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!*

*மயிலாடுதுறையில் தீபாவளியை முன்னிட்டு மக்கள் அதிகமாக வரும்,  மணிக்கூண்டு வழியாக பேருந்துகளை இயக்காமல்  உடனே  போக்குவரத்தில் மாற்றம் செய்திட சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!*   மயிலாடுதுறை நகரில் பேருந்து நிலையம சாலைகள், காந்திஜி ரோடு, மணிக்கூண்டு, மற்றும்  பட்டமங்கலத்தெரு, பெரிய கடைத்தெரு ஆகியன  அதிக வணிக வளாகங்களும், நிறுவனங்களும், அனைத்து வகை கடைகளும் முழுமையாகவும் தொடர்ச்சியாகவும்  இருப்பதனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்து தங்களுக்குத் தேவையான ஆடை, அணிகலன்கள்,பட்டாசுகள்,இனிப்புகள் மற்றும்  குடும்பத்துக்கான பொருட்களை வாங்க அதிக அளவில் திரளாக குவிந்து வருகிறார்கள். சற்றேறக்குறைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை பூம்புகார் சீர்காழி குத்தாலம்  மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார்  ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் தேவைகளுக்கு மயிலாடுதுறை நகருக்கு வருகை தந்து பொருட்களை வாங்கிச் செல்வார்கள் என்பது உறுதி. ஆகவே   பொது மக்கள்  வருகை தரும்   மயிலாடுதுறை பேருந்து நிலையம் முதல் மணிக்கூண்டு வழியாக பட்டமங்கலத்தெரு வரை  இவ்வழியாக பேருந்துகளை இயக்குகின்ற பொழுது பொதுமக்களுக்கு பெரும் இடையூறும் சிரமமும் ஏற்படுகிறது. மேலும்  இச்சாலைகளின் இருபுறமும் தீபாவளியை முன்னிட்டு பண்டிகை கால தரைக்கடை வியாபாரிகள் அணிவகுத்து இருப்பதால், பேருந்து வந்தால் ஒதுங்குவதற்கு கூட இடமில்லாத  சூழல் ஏற்படுகின்றது. ஆகவே உடனடியாக பேருந்து நிலையத்திலிருந்து வெளிவரும் சிதம்பரம், சென்னை, பூம்புகார் மார்க்கத்தில் செல்லும் அனைத்து பேருந்துகளையும் நான்கு சக்கர வாகனங்களையும் காந்திஜி சாலை, அரசு மருத்துவமனை சாலை வழியாக திருப்பி மாற்றுப் பாதையில் இயக்குகின்ற பொழுது பொதுமக்கள் நிம்மதியாக தீபாவளி ஜவுளி மற்றும் பொருட்களை வாங்கிச் செல்ல முடியும். ஆகவே மயிலாடுதுறை போக்குவரத்து காவல்துறை இதற்கான முயற்சியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Previous Post Next Post