கேரளாவில் இருந்து மாவோயிஸ்டுகள் தப்பி ஓட்டம்: தமிழக-கர்நாடக எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு.


 கேரளாவில்இருந்துமாவோயிஸ்டு கள்தப்பிஓடியதைதொடர்ந்துதமிழக கர்நாடக எல்லையில்போலீசார் தீவி ர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகி றார்கள்.காரப்பள்ளம்சோதனைச் சாவடியில் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஜவகர் நேற்று தீடீர் ஆய்வுசெய்தார் 

கேரளமாநிலம் கண்ணூர் மாவட்டம் அய்யங்குன்னுஇடிப்பகுற்றிவனப்  பகுதியில்.கடந்துமூன்றுதினங்களு க்கு முன்பு போலீசாருக்கும்,மாவோ யிஸ்டுகளுக்கும்கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.அப்போது போலீ சாரின்துப்பாக்கிச்சூட்டைசமாளிக்க முடியாமல், மாவோயிஸ்டுகள் துப் பாக்கிகளை கீழே போட்டு விட்டு, அங்கிருந்து தப்பி ஓடினர். அந்த துப்பாக்கிகளை கேரள போலீசார் கைப்பற்றினர்.

துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட மாவோயிஸ்டுகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்தோஷ், வசந்த் என்கிற ரமேஷ்,கேரளாவைச் சேர்ந்த சோம ன் மற்றும் மனோஜ் என்கிற ஆஷிக், கர்நாடகாவைச் சேர்ந்த ஜிஷா மற்றும் விக்ரம் கவுடா ஆகியோர் என்பதுதெரியவந்துள்ளது.அதைத்தொடர்ந்து,அவர்களை பிடிக்க 3 மாநிலபோலீசார்பாதுகாப்பையும், வாகன சோதனையும்தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்ஒருபகுதியாக தமி ழக,கர்நாடகஎல்லைபகுதிகளான காரப்பள்ளம் ,கேர்மாளம் சோதனை ச் சாவடியில்போலீசார்மற்றும்வனத் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

வாகன சோதனையில், சந்தேகப் படும்படியாக வரும் நபர்கள் குறி த்து விசாரனை செய்தும், மாவோ ஸ்ட்டுகள் நடமாட்டம் குறித்தும், தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.காரப்பள்ளம் கேர் மாளம் சோதனைச் சாவடிகளில் நேற்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, சந்தேகப்படும்படி யான நபர்கள் நடமாட்டத்தை கண் காணித்து விசாரனை மேற்கொள்ள வேண்டும் எனவும்,தீவிர வாகன சோதனை செய்த பின்னரே வாகன ங்களை அனுமதிக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுரை வழங்கி னார்.
Previous Post Next Post