கோவை கிராம கோவில் பூசாரிகள் பேரவை தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுக்குழு ராமநாதபுரத்தில் நடைபெற்றது

கோவை  கிராம கோவில் பூசாரிகள் பேரவை தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் கோவை மாவட்ட பொதுக்குழுவானது இராமநாதபுரம் ஒலம்பஸ் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் மண்டபத்தில் ஞாயிறு 05 -11-2023 தேதி காலை 10 மணிக்கு மாநகர மாவட்ட அமைப்பாளர்  திருஞானம் சம்பந்தம் பூசாரி தலைமையில் நடைபெற்றது வரவேற்புரை  கோவிந்தராஜ் தெற்கு மாவட்ட அமைப்பாளர் முன்னிலை  ரங்கசாமி மாநகர மாவட்ட இணை செயலாளர்  லாலா மணிகண்டன் கோவை கோட்ட கொள்கை பரப்புச் செயலாளர்  குமரவேல் திருப்பூர் கோட்ட அமைப்பாளர் 
சிறப்புரையாற்றினார்கள் வழக்கறிஞர் விஜயகுமார் மாநில இணை பொதுச் செயலாளர் , சோமசுந்தரம் மாநில  பொதுசெயலாளர் ,வாழ்த்துரை வழங்கியவர்கள்  ஹரி பிரசாத் கோவை கோட்ட தலைவர்  விஷ்ணு ராஜா மாநகர மாவட்ட செயலாளர்  உதயகுமார் கொங்கு மண்டல தலைவர்  கோபால் கோவை கோட்ட இனண அமைப்பாளர்  சிவகுரு மாநகர மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் புவனேஸ்வரி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மேலும் இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களில் இருந்தும் பூசாரிகள் மற்றும் விஹெச்பி  நிர்வாகிகளும் . மகளிர் அணியினர் உட்பட 225 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிறைவில் பிரசாந்த் குமார்  தெற்கு மாநகர் மாவட்ட செயலாளர் நன்றிகூறினார் புதிய நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர். இப்பொதுக் குழுவின் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1) கிராமக்கோவில் பூசாரிகளுக்கு தற்போது வழங்கி வரும்  4000 ரூபாய் உதவித்தொகையை மற்றும் ஓய்வூதியத்தை  20000 ஆக உயர்த்த வேண்டும்.
2) கிராமக்கோவில் பூசாரிகளுக்கு கோவில் நிலங்களையும்& ஆக்கிரமிக்கபட்ட கோவில் பூமிகளை மீட்டு குத்தகைக்கு கொடுத்து  அதில் வரும் வருமானத்தை வைத்து  பூஜை செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
3) கிராமக்கோவில் பூசாரிகளுக்கு பசு மாடுகளை தானமாக கொடுத்து வளர்க்க உதவி செய்ய வேண்டும்.
4) கிராம கோவில் பூசாரிகளின் குழந்தைகளுக்கு  தனி இட ஒதுக்கீடு வழங்கி வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
5) ஓய்வூதியம் பெறவும், நலவாரியத்தில் புதிய உறுப்பினர்களை  பதிவு செய்யவும் பூஜாரிகளின் ஆண்டு வருமான உச்சவரம்பை   ரூபாய்.3 லட்சமாக உயர்த்த வேண்டும்.
6)கிராம கோவில் பூசாரிகள் நலவாரியத்தில்   புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கு   அந்தந்த தாலுகாக்களில்   அறநிலைத்துறை அலுவலகங்களில் பதிவு செய்து உடனடியாக அடையாள அட்டை வழங்க வேண்டும்  
7)இந்து சமய அறநிலை துறையின் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பணியாற்றும்  பூஜாரிகளுக்கு  மாதந்தோறும் அரசு வழங்கி  வரும் 1000- ரூபாய் தொகுப்பு ஊதியத்தை " எண்டோமென்ட் கோவில்களில்  பணியாற்றும் பூஜாரிகளுக்கும் வழங்கிட வேண்டும்.
8)ஓய்வூதியம் பெரும் பூஜாரிகளின்
இறப்புக்கு பின்  அவரது மனைவிக்கு  ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.
9)அனைத்து கோவில்களுக்கும் இலவச மின்சார வழங்க வேண்டும் என்று இப்போது குழு கேட்டுக் கொள்கிறது. பொதுக்குழுவில் புதிய பொறுப்பாளர்கள் கீழ்க்கண்டவர் அறிவிக்கப்பட்டனர் பூசாரி பேரவை கோவை மாவட்ட அமைப்பாளராக பொள்ளாச்சி கோவிந்தராஜ்  கோவை கோட்ட அமைப்பாளராக ஆலாந்துறை கோபால்  மாநகர மாவட்ட அமைப்பாளராக திருஞானம் சம்பந்தம்  மாநகர் மாவட்ட இணை அமைப்பாளராக இருட்டு பள்ளம் ரங்கசாமி  இராமநாதபுரம் மண்டல் அமைப்பாளராக  சரவணன்  மகளிர் அணி மாநகர்மாவட்ட அமைப்பாளராக  புவனேஸ்வரி  ராமநாதபுரம் மண்டல் அமைப்பாளராக  சகுந்தலா தேவி  மண்டல இணையப்பாளராக மகாலட்சுமி அவர்களும் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநகர மாவட்ட இணைப்பாளராக எல்ஐசி அருண்குமார் மணிகண்டன் ஆகியோரும் மதுக்கரை ஒன்றிய அமைப்பாளராக  மிதுலன் ஆகியோரும் மாநில பொது செயலாளர் அவர்களால் அறிவிக்கப்பட்டு அவர்கள் பணி சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
Previous Post Next Post