*அரசு உறுதிமொழி குழு நவம்பர் 1,2,3 தேதிகளில் விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நிலுவையில் உள்ள உறுதிமொழிகளை ஆய்வு மேற்கொள்கிறது. பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் JK@S.ஜெயக்குமார் MLA பங்கேற்பு*
முன்னதாக விருதுநகர் மாவட்டம் வந்தடைந்த இக்குழு காலை 9 மணிக்கு அரசு விருந்தினர் இல்லத்தில் கூடி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நிலுவையில் உள்ள உறுதிமொழிக்குள் நிறைவேற்றப்பட்டவை மற்றும் பணிகள் நடைபெற்று வருவதை இக்குழு ஆய்வு மேற்கொள்ளும். பிற்பகலில் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் துறை அதிகாரிகளுடன் நிலுவையில் உள்ள உறுதிமொழிகள் குறித்து விவாதிக்கப்படும். பின்னர் இதே போல் தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இக்குழு தொடர்ந்துமூன்று நாட்கள் ஆய்வு மேற்கொள்கிறது. இக்குழுவில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் JK@S.ஜெயக்குமார் MLA அவர்கள் குழுவினரோடு ஆய்வு பயணம் மேற்கொண்டுள்ளார்.