கோபி பச்சைமலை முருகன் கோவில் சூரசம்ஹாரம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு வழிபாடு.,

கோபி பச்சைமலை முருகன் கோவில் சூரசம்ஹாரம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு வழிபாடு...


ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் பச்சைமலை முருகன் கோவிலில் கடந்த 13 ம் தேதி கந்த சஷ்டி விழா முருகனுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது ஏழுநாள் நடைபெறும் கந்தசஷ்டி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர்
இதனைதொடர்ந்து பச்சைமலை முருகனுக்கு  நாள்தோறும் காலை,மாலை யாக வேள்விகள் நடைபெற்று முருகனுக்கு அபிஷேக அலங்காரம் வழிபாடு நடைபெற்றது.இதில் உற்சவருக்கு இன்றுசிறப்பு வழிபாடு நடைபெற்று  பச்சைமலை முருகன் கோவிலில் மரகதவள்ளி தாயாரிடம் வேல் பெறப்பட்டு 

வேங்கை அம்மையார் பள்ளி, மொடச்சூர் சாலை, பேருந்து நிலையம், மேட்டுவலவு, புதுப்பாளையம் வழியாக சென்று சூரன்களை முருகபெருமான்  சூரம்சம்ஹாரம் செய்தார் 
இதனையடுத்து சூரசம்ஹார நிகழ்வில் கலந்து கொண்ட  ஆயிரக்கணக்கான பக்கதர்கள்
 முருகபெருமானை வழிபட்டு அவரவர் கையில்  பன்னீர் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர்,இதனைத் தொடர்ந்து நாளை காலை திருக்கல்யாணம் நடக்கிறது.
Previous Post Next Post