ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா உடல் உறுப்புகளை தானம் செய்த ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சின்னமடத்துப்பாளையத்தை சேர்ந்த திருபழனிச்சாமி அவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னனி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாத்தியமாகியுள்ளது. சாதனை
தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருந்தார்.
அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டம், கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சின்னமடத்துப்பாளையத்தை சேர்ந்த திரு. பழனிச்சாமி அவர்கள் மூளைச்சாவு அடைந்ததையொட்டி அவரது உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது.