தூத்துக்குடி முருகேசன் நகர் தெற்கு தெருவை சேர்ந்த வசந்தகுமார் என்பவரது மகனான 24 வயதான மாரி செல்வம், திருவிக நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகாவை 2 ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்.
இவர்களுடைய காதல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கார்த்திகாவின் வீட்டிற்கு தெரிய வந்தது. இதனால் கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
தந்தையின் எதிர்ப்பையும் மீறி கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். அருகில் உள்ள ரெஜிஸ்டர் அலுவலகத்தில் அவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
பின்னர் புதுமண தம்பதிகள் இருவரும் முருகேசன் நகரில் உள்ள மாரி செல்வம் வீட்டில் தங்கி 3 நாட்களாக குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்கள்.
கார்த்திகா காதல் திருமணம் செய்தது அவரது அப்பா முத்துராமலிங்கத்திற்கு தெரியவரவே அவர் கடும் ஆத்திரம் அடைந்தார். இன்று மாலை 6 மணி அளவில் முத்துராமலிங்கமும், அவருடன் 5 பேரும் சேர்ந்து இரு சக்கர வாகனத்தில் மாரிசெல்வம் வீட்டுக்கு வந்தனர்.
அங்கு இருந்த மாாிசெல்வத்தை அவர்கள் சரமாரியாக வெட்டினார்கள். மேலும் கார்த்திகாவை தனது மகள் என்றும் பார்க்காமல் கொடூரமாக வெட்டிக் கொன்றார்கள். புதுமண காதல் ஜோடி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்கள்.
கொலையாளிகள் தைப்பி ஓடி விட்டனர். தூத்துக்குடி எஸ்.பி., பாலாஜி சரவணன் தூத்துக்குடி ரூரல் டி.எ.ஸ்பி., சுரேஷ் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தூத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது