உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி.!


 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி.!


ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி வென்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி தோற்கடித்திருக்கிறது.


உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரு அணிகளும் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தது.


இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணி வீரர்கள் 4 ரன்களில் ஆட்டம் இழக்க அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். இந்த தொடர் முழுவதும் நன்றாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் நான்கு ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 81 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.


இதனை அடுத்து விராட் கோலி ராகுலும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் விராட் கோலி 54 ரன்களில் போல்டாக இந்தியா சரிவை நோக்கி சென்றது. ராகுல் 66 ரன்களும் சூரியகுமார் யாதவ் 18 ரன்களும் எடுக்க இந்திய அணி 50 ஓவர் முடிவில் 240 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர் மிச்சல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


இதனை அடுத்து 241 ரன்கக் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் ஓவரிலே பவுண்டரிகளை விளாசி 15 ரன்களை சேர்த்து நல்ல தொடக்கத்தை பெற்றது. எனினும் டேவிட் வார்னரின் விக்கெட்டை முகமது சமி வீழ்த்த இந்தியாவுக்கு நம்பிக்கை பிறந்தது.


இதைப் போன்று மிச்சல் மார்ஸ் 15 ரன்களிலும், ஸ்டீவன் ஸ்மித் 4 ரன்களிலும் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி 47 ரன்களில் மூன்று விக்கெட்டுகள் இழந்தது. இதனால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றுவிடலாம் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஆனால் தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹேட் இந்தியாவின் கனவுக்கு வேட்டு வைத்தார். மார்னஸ் லாபஸ்சேனுடன் ஜோடி சேர்ந்த அவர் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தார். ஒரு கட்டத்தில் பனிப்பொழிவு ஏற்பட பந்து நன்றாக பேட்டிற்கு வர தொடங்கியது.


இதனை அடுத்து டிராவிஸ் ஹேட் அதிரடி காட்ட 95 பந்துகளில் சதம் விளாசினார். சிறப்பாக விளையாடிய அவர் 120 பந்துகளில் 137 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 43 ஓவரில் வெற்றி இலக்கை 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.இதன் மூலம் உலகக்கோப்பை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி வென்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது.

Previous Post Next Post