சாதி பெயரைக் கூறி தாக்கியவருக்கு 9 ஆண்டு சிறை - தூத்துக்குடி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.!


 சாதி பெயரைக் கூறி தாக்கியவருக்கு 9 ஆண்டு சிறை - தூத்துக்குடி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.!


சாதி பெயரைக் கூறி 3 பேரைத் தாக்கியவருக்கு 9 ஆண்டு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வசவப்பனேரி பகுதியைச் சோ்ந்த துரைராஜ் (69), தனது மனைவி பெருமாள் (53), வசவப்பனேரியைச் சோ்ந்த நண்பா் சேகா் (43) ஆகியோருடன் ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்தில் 2018ஆம் ஆண்டு நின்றிருந்தாா். அப்போது அங்கு வந்த, செய்துங்கநல்லூரைச் சோ்ந்த தொழிலாளியான கொம்பையா (45), இவா்கள் மூவரையும் சாதி பெயரைச் சொல்லி திட்டி, பாட்டிலால் தாக்கினாராம். இதில், காயமடைந்த அவா்கள் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.


புகாரின்பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீஸாா் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, கொம்பையாவை கைது செய்தனா். இந்த வழக்கு தூத்துக்குடி பட்டியலினம், பழங்குடியினருக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.


வழக்கை நீதிபதி சுவாமிநாதன் நேற்று விசாரித்து, கொம்பையாவுக்கு 9 ஆண்டு 3 மாதங்கள் சிறை தண்டனை, ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்துத் தீா்ப்பளித்தாா். பாதிக்கப்பட்ட 3 பேருக்கும் சம்பவம் நடந்த நடைமுறையில் உள்ள வன்கொடுமைத் தடுப்பு விதிகள்படியும், அரசாணைகளின் படியும் உரிய தீருதவி வழங்க உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞா் பூங்குமாா் ஆஜரானாா்.

Previous Post Next Post