நேபாளத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.4 ஆக பதிவு.!
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லி, அயோத்தி, லக்னோ மற்றும் உத்தரபிரதேசத்தின் பிற பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம்.
அயோத்தி, லக்னோ மற்றும் உத்தரபிரதேசத்தின் பிற பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாளத்தில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் டெல்லி- என்சிஆர் பகுதியிலும் உணரப்பட்டது. பெரிய சேதம் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.