வீதியில் உறங்கியவர்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.! ரூ.500 , 500 ஆக உறங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு தெரியாமலேயே பணத்தை வைத்துச் சென்றார் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் குர்பாஸ்.!
ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஏழைகளுக்கு தீபாவளிக்காக பணம் கொடுத்து உதவி செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்களே செய்ய தயங்கும் ஒரு செயலை ஆப்கானிஸ்தான் வீரர் செய்வதாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
2023 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் சாம்பியன் பட்டத்தை வெல்லாமல் சென்றிருக்கலாம். ஆனால் இங்கு இருக்கும் ஒவ்வொரு இந்தியர்களின் மனதையும் அவர்கள் கைப்பற்றி விட்டார்கள். என் நாட்டில் ஒன்றும் இல்லாமல் இருக்கலாம், ஆனால் எங்களிடம் அள்ளிக் கொடுக்கும் குணம் இருக்கிறது என்று காட்டியிருக்கிறார் கிரிக்கெட் வீரர் குர்பாஸ்.!
https://twitter.com/mufaddal_vohra/status/1723550985401040963?t=rgMQtS8GdNXU4hqNZhCkrw&s=19
போர், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் தற்போது கிரிக்கெட் உலகில் பலம் வாய்ந்த நாடாக வளர்ந்து வருகிறது.
நடப்பு உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் இலங்கை இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளை ஆப்கானிஸ்தான் வீழ்த்தி அசத்தியிருக்கிறது. அரை இறுதி வாய்ப்பை நூலிழையில் ஆப்கானிஸ்தான் அணி தவறவிட்டது. ஆப்கானிஸ்தான் மோதிய போட்டிகளுக்கு இந்திய ரசிகர்களும் அதிக அளவில் திரண்டு ஆதரவு தெரிவித்தார்கள்.
இதனால் இந்தியா செய்த கைமாறை நாங்கள் மறக்க மாட்டோம் என்று பல ஆப்கானிஸ்தான் வீரர்களும் வெளிப்படையாக பேட்டியில் கூறி இருக்கிறார்கள். இந்த நிலையில் அகமதாபாத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஏழைகளுக்கு தீபாவளிக்காக பணம் கொடுத்து உதவி செய்திருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்களே செய்ய தயங்கும் ஒரு செயலை ஆப்கானிஸ்தான் வீரர் செய்வதாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஒன்றும் பணக்காரர்கள் இல்லை. அவர்களுக்கும் சம்பளம் மிகவும் குறைவுதான்.
ஆனால் குர்பாஸ் போன்ற சில வீரர்கள் உலகம் முழுவதும் நடைபெறும் டி20 தொடர்கள் விளையாடி பணம் சம்பாதித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் அந்த பணத்தை வைத்து தான் அவர் இந்த உதவியை செய்து இருக்கிறார்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் கூட குர்பாஸ் ஒன்பது போட்டிகளில் விளையாடி 280 ரன்கள் சேர்த்தார். சராசரி 38 என்ற அளவிலும் ஸ்ட்ரைக் ரேட் 98 என்ற அளவிலும் இருக்கிறது. பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் குர்பாஸ்ரை சதம் அடித்திருந்தார்.
இந்த நிலையில் கடைசி நான்கு போட்டிகளில் அவர் 56 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அதிலும் அவர் சதமோ இல்லை அரைசிதமோ அளித்து இருந்தால் நிச்சயம் 400 ரன்களுக்கு மேல் இந்த உலகக் கோப்பையில் குர்பாஸ் அடித்திருப்பார். தற்போது குர்பாஸ் செய்த இந்த உதவியாளர் அவர் இந்திய ரசிகர்கள் கண்ணுக்கு ஹீரோவாக தெரிகிறார்.