திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சற்று முன் நடந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாகினர்.
கோவையை சேர்ந்தவர்கள் கோவையிலிருந்து பழனி கோவிலுக்கு சென்று உள்ளனர். மீண்டும் அவரது இல்லத்திற்கு திரும்பி வரும் போது தாராபுரம் அருகே மனகடவு எனும் இடத்தில் இந்த கொடூர விபத்து நடந்துள்ளது.
எதிரே வந்த லாரி மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள். ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல் கிடைத்துள்ளது. அவரும் பலியாகி விட்டார். இது குறித்து அலங்கியம் காவல்துறையினர் சம்பவ இடத்தில் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் விவரங்கள் இனி விசாரணையில் தெரிய வரும்.
முதல் கட்ட விசாரணையில்கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த தமிழ்மணி இவரது மனைவி சித்ரா, தாராபுரம் உடுமலை சாலையை சேர்ந்த பாலகிருஷ்ணன்,செல்வராணி மற்றும் தில்லை அரசி பலியாகியதாக தெரியவந்துள்ளது.
இந்த செய்தி தொடர்ச்சியாக அப்டேட் செய்யப்படுகிறது.