ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 38 பேர் பலி, 6 பேர் கவலைக்கிடம்.!
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் படோடி கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென 300 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து பள்ளத்தில் உருண்டு கீழே விழுந்ததில், அதில் இருந்த 38 பேர் உயிரிழந்தனர். பேர் காயமடைந்துள்ளனர். 19 அவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள தோடா அரசு மருத்துவமனை மற்றும் ஜம்முவில் உள்ள பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கிஷ்த்வாரில் இருந்து ஜம்மு நோக்கி சென்று கொண்டிருந்த JK02CN-6555 என்ற பதிவு எண் கொண்ட பேருந்து 55 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ட்ரங்கல் அஸ்ஸார் பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 300 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் நிலவுகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்