தேவபூமி என்று அழைக்கக்கூடிய உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை பகுதியில் இந்துக்களின் ஏராளமான புனித தலங்கள் இருக்கின்றன. இதில் முக்கியமாக கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் என்று அழைக்கக் கூடிய நான்கு புண்ணிய தலங்கள் இருக்கின்றன.
இந்த கோவில்களுக்கு ஒவ்வொரு நாளும் தீர்த்த யாத்திரையாக பல லட்சம் பேர் சென்று வருகிறார்கள். இதனால் மத்திய அரசும், உத்தரகாண்ட் அரசும் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து இந்த பகுதிகளுக்கு செல்லக் கூடிய சாலைகளை மேம்படுத்தி வருகிறது.
இதில் ஒரு பகுதியாக பல்வேறு இடங்களில் இமயமலையை குடைந்து சுரங்கங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த பணிகளை மத்திய அரசு வேகமாக செய்து வருகிறது.
கங்கோத்ரி செல்லும் சாலையில், உத்தரகாஷி அருகே சில்க்யார் மற்றும் தண்டல்யான் பகுதிகளுக்கு இடையே அமைக்கப்படும் நான்கரை கி.மீ நீளமுள்ள சுரங்கத்தில் 200 மீட்டர் தூரத்தில் இடிந்தது. இதில் 36 பேர் சிக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப்பணிகள் நடந்து வருகிறது. இப்போதைக்கு இறப்புகள் ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த சுரங்கப்பணி முடிவடைந்தால் 26 கி.மீ., தூர பயணம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.