காஷ்மீர் மலைச்சாலையில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 33 பேர் பலி!

 ஜம்மு காஷ்மீர் மாநிலம் இமயமலையின் மேல் அமைந்துள்ள மாநிலம் ஆகும். இங்குள்ள மலைப்பகுதிகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் மிக கொடூரமான வாகன விபத்துகள் அவ்வப்போது நடந்து சோகத்தை ஏற்படுத்தி விடுகிறது.

அந்த வகையில் இன்று பஸ் விபத்து ஒன்று கொடூரமாக 33 உயிர்களை பலிவாங்கி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் இந்த விபத்து நடந்திருக்கிறது, கிஸ்த்வாரில் இருந்து ஜம்மு செல்லும் சாலையில் அஸ்ஸார் எனும் இடத்தில் 300 அடி பள்ளத்தில் இந்த பஸ் கவிழ்ந்தது.



ஆரம்பத்தில் 5 பேர் மட்டுமே பலியாகி இருக்க கூடும் என்று கருதிய நிலையில், பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காயமடைந்தவர்கள் கிஸ்த்வார் மற்றும் தோடாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கை மேலும அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 

Previous Post Next Post