ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கும்டாபுரம்கிராமத்தில்சாணியடிவி னோத திருவிழா நடைபெற்றது. தமி ழக கர்நாடக மாநிலங்களைசேர்ந்த ஆயிரக்கணக்கானபக்தர்கள்கலந்துகொண்டுதிருவிழாவைரசித்தனர்
திருவிழாவிற்கு முதல்நாளான நேற் றே கோயிலின் பின்பக்கம் ஊர் மக் கள்சாணத்தைகுவித்துவைத்திருந் தனர். புதன்கிழமை காலைபீரேஸ் வரரை கோயிலுக்கு அருகேயுள்ள குளத்தில்நீராடச் செய்து,கழுதை மூலமாக கோயிலுக்கு அழைத்து வந்து பூஜைகள் செய்தனர். அதன் பிறகு கோயிலுக்கு பின்புறம் குவித் து வைத்திருந்த சாணத்தை உருண் டையாக்கி ஒருவர் மீது ஒருவர் வீசியெறிந்து வழிபாடு நடத்தினர். இந்த நிகழ் வின் போது ஆண்கள் சட்டை அணிவதில்லை. சாணியடி நிகழ்வுநடந்தபிறகு,பக்தர்கள்கோயி லுக்குஅருகிலுள்ள குளத்தில் குளி த்துவிட்டு, பீரேஸ்வரரை வணங்கி னர்.
இந்த வழிபாட்டினால் ஊர்மக்கள், கால்நடைகள் நலம்பெறுவதுடன், விவசாயமும் செழிப்பாக இருக்கு மென்கின்றனர். சாணியை உடலில் பூசுவதன் மூலம் உடலிலுள்ள நோய் கள் மற்றும்பீடைகள்ஒழியுமெனவும் கும்டாபுரம் கிராமமக்கள் நம்புகின்ற னர்.இந்த சாணியடி வினோத திரு விழாவிற்குதமிழக கர்நாடகாவிலி ருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சாணியடி திருவிழாநடந்தஇடத்தில் கிடந்த சாணியை எடுத்துக் கொண் டு சென்று தங்களுடையவிளை நில ங்களில்விவசாயிகள்வீசுகிறார்கள்.அவ்வாறு செய்தால் பயிர்களை நோய் தாக்காது என்பதும் இந்த கிராம மக்களின் நம்பிக்கையாக கருதப்படுகிறது.