"திருச்செந்தூர் கோயிலில் ரூ.300 கோடியில் வளர்ச்சிப் பணிகள், 2025 ம் ஆண்டுக்குள் திருச்செந்தூர் கோயில் அனைத்து வசதியை பெற்றிருக்கும் " - சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் பேட்டி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ்நாடு சட்டப் பேரவை அரசுஉறுதி மொழிககுழு தலைவர். வேல்முருகன் எம்எல்ஏ தலைமையில் உறுப்பினர்கள் சேலம் வடக்கு அருள். அண்ணாநகர் மோகன் நாமக்கல் ராமலிங்கம், பெருந்துறை ஜெயக்குமார் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து குழுவினர் கோயிலில் இந்துசமய அறநிலையத் துறை மற்றும் HCL நிறுவனம் சார்பில் ரூ.300 கோடி மதிப் பீட்டில் நடந்து வரும் பெருந்திட்ட வளாகப் பணிகளையும் அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் பக்தர்கள் தங்கும் யாத்ரி நிவாஸ் விடுதிப்பணிகள் மற்றும் அன்னதானக் கூடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
பின்னர் சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் கூறியதாவது திருச்செந் தூர் கோயிலில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தோம்,அறநிலையத்துறை சார்பில் ரூ. 100 கோடி செலவிலும், HCL நிறுவனம் சார்பில் ரூ. 200 கோடி செலவிலும் 2022 முதல் 2025 வரை 4 கட்டங்களாக பணிகள் நடந்து வருகிறது.
அறநிலையத் துறை சார்பில் நடந்து வரும் யாத்ரி நிவாஸ் விடுதிப்பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. பணி நிறைவு பெற்ற பிறகு முதல்வரால் திறந்து வைக்கப்படும். இப்போது பக்தர்கள் தங்க தரிசனம் செய்திட நிறைய சிரமம் உள்ளது. உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வருகை தரும் திருச்செந்தூர் கோயில் எல்லா வசதிகளும் பெற்றதாக இருக்க HCL நிறுவனம் சார்பில் தொழில திபர் ஷிவ் நாடார் தாமாக முன்வந்து ரூ 200 கோடி தந்துள்ளார்.
இங்கு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற பிறகு இந்திய அளவில் எல்லா வசதிகளும் நிறைந்த கோயிலாக திருச்செந்தூர் கோவில் இருக்கும். அதன் மூலம் பக்தர்கள் இலகுவாக சுவாமி தரிசனம் செய்ய முடியும். கிழக்கு கடற்கரை சாலை திட்டம் நாகப்பட டினம் முதல் இங்கு வரை வருவதற்கான சூழல் உள்ளது. மேலும் திருச்செந் தூர் கோயிலுக்கு புறவழிச்சாலை அமைப்பது குறித்தும் அரசிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது இத்திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் திட்ட இயக்குநர், நெடுஞ்சாலைத்துறை முதன்மைப் பொறியாளர் முன்னிலையில் ஆலோசனை செய்யப்பட்டு அந்த திட்டங்களின் சாத்தியம் ' குறித்து அறிவிக்கப்படும்.
பக்தர்களை உள்ளூர், வெளியூர் என இனம் காண முடியாது. உள்ளூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு முன்னுரிமை அளிப்பது குறித்து அரசிடம் வலியுறுத்தப்படும்.
மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை கொண்டு வராவிட்டாலும் அவர்கள் தனியாக தரிசனத்திற்கு அனுமதிக்கபடுவார்கள். கோயிலில் ஒரே நேரத்தில் 300 கோடி செலவில் பணிகள் நடப்பதால் பக்தர்களுக்கு பல்வேறு சிரமம் ஏற்பட்டுள்ளது.
கடலில் கழிவுநீர் கலப்பதை தடுத் திடவும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் சம்பந்தப்பட்ட .துறையினரிடம் குழு கேள்வி. எழுப்பி அதற்கான பதிலை தருகிறேன். திருச்செந்தூர் கோயில் பேருந்து நிலையம் வரை பேருந்துகள் வந்து செல்வதற்கு குழு உரிய உத்தரவு பிறப்பிக்கும், என்றார்.
அப்போது மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி சட் டப்பேரவை செயலர் சீனிவாசன், இணை செயலர் கருணாநிதி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார். திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் கார்த்திக், கோட்டாட்சியர் குருச்சந்திரன், திருச்செந்தூர் டி.எஸ்.பி வசந்தராஜ், தாசில்தார் வாமனன், திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் ரமேஷ், ஆணையர் கண்மணி, கோயில் பொறியாளர்கள் முருகன், சந்தான கிருஷ்ணன், மின்வாரிய உதவி பொறியாளர் முத்துராமன், மாவட்ட அறங்காவலர் சுடலை, இன்ஸ்பெக்டர் தர்மர் உள்பட பலர் உடனிருந்தனர்.
தொடர்ந்து உடன் குடியில் ரூ.9.250 கோடி மதிப்பீட்டில் நடந்துவரும் அனல்மின் நிலைய பணிகளை பார்வையிட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழிக்குழுவினர், வருகிற 2025ல் அனல்மின் நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என்றனர். அப்போது உடன்குடி யூனியன் சேர் மன் பாலசிங், பேரூராட்சி துணை தலைவர் மால்ராஜேஷ் உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளங்கோ, மாவட்ட பிரநிநிதிகள் ஹீபர்மோசஸ், பேரூராட்சி கவுன்சிவர் அஸ்ஸாப்கல்லாசி மற்றும் பலர் உடனிருந்தனர்.