சென்னையில் தீபாவளி நெரிசலை தடுக்க 3 தற்காலிக பேருந்து நிலையங்கள்....கோயம்பேடு உள்பட 6 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கம்!

  சென்னையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை)  முதல் மூன்று தற்காலிக பேருந்து பேருந்து நிலையங்கள் செயல்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வந்தாலே சென்னைக்கு வெளியே சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் திரள்வதால் பெரும் போக்குவரத்து சிக்கல் ஏற்படுவது ஒவ்வொரு ஆண்டும் தீர்க்க முடியாத பிரச்சினை தான். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைளை முன்னிட்டு நாளை முதல் 3 நாட்களுக்கு 3 தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

அதன்படி மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி,  ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 

 கே.கே. நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தில் இருந்து ECR வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தாம்பரம்  (MEPZ)  அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. 

இத்துடன் தாம்பரம்  இரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

பூந்தமல்லி  பேருந்து நிறுத்தத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மேலே உள்ள பேருந்து நிலையங்களில் இருந்து என குறிப்பிடாத   இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது மயிலாடுதுறை, அரியலூர்,   ஜெயங்கொண்டம்,  நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை,  தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை,  திண்டுக்கல், விருதுநகர்,  திருப்பூர், ஈரோடு, ஊட்டி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 


Previous Post Next Post