திமுகஇளைஞர் அணிமாநாடு.பிரச்சாரபயணக்குழுவினர்சத்தியமங்கலம்வருகை.நகர்மன்றத்தலைவர்ஆர்.ஜானகிராமசாமிதலைமையில்திமுகவினர்உற்சாகவரவேற்பு.


திராவிட முன்னேற்ற கழக இளைஞர் அணியின் 2வது மாநாடு வருகிற 17ம் தேதி சேலத்தில், மாநில உரிமை மீட்பு மாநாடாக,நடைபெறுவதையொட்டி,மா நாட்டு பிரச்சார நடவடிக்கையாக திமு கழகஇளைஞரணிசெயலாளரும், தமி ழக இளைஞர்நலன்மற்றும்விளையா ட்டுத்துறை அமைச்சருமானஉதயநிதி ஸ்டாலின் தலைமையில், கடந்த 15ம் தேதி கன்னியாகுமரியில், (மோட்டார் சைக்கிள்) இருசக்கர வாகன பிரச்சார பயணத்தை துவக்கினர். இப்பிரச்சார பயணக்குழுவினர் நவ. 15 முதல் 27 வரை, 188 இரு சக்கர (மோட்டார் சைக் கிள்) வாகனங்களில், 234 சட்டமன்ற தொகுதிகளில், 504 பிரச்சார மையங் களில்,நீட்தேர்வுதடை,மற்றும்மாநாட்டு பிரச்சாரம் மேற்கொண்டு சுமார் 8,647 கி.மீ பயணித்து, சேலம் சென்றடைய வுள்ளனர்.

இந்த பிரச்சார பயணிக் குழுவினர், கவுந்தபாடியில் துவங்கி, கோபி வழி யாக,சத்தியமங்கலம் வந்தடைந்தனர் . பிரச்சார பயணக் குழுவினருக்கு, திமுக சத்தியமங்கலம் நகரச் செயலா ளரும், சத்தியமங்கலம் நகர்மன்ற தலைவருமான ஆர்.ஜானகி ராமசாமி தலைமையில், சத்திஎஸ்.பி.எஸ் கார் னரில், சத்தி நகர திமுக நிர்வாகிகள், இளைஞர் அணியினர், திமுக சத்தி நகர் மன்ற உறுப்பினர் கள், பொது மக்கள் திரண்டு நின்று, உற்சாக வர வேற்பு அளித்தனர். பிரச்சார பயணக் குழுவினருக்கு, நகர் மன்றத்தலைவர் ஆர்.ஜானகிராமசாமிகைத்தறிதுண்டு அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார். 

பிரச்சாரபயணக்குழவினர்சத்தி நகர் மன்றதலைவர்மற்றும்சத்திநகரதிமுக நிர்வாகிகளுடன் புகைப் படம் எடுத்து மகிழ்ந்தனர்.பின்னர்அத்தாணி ரோடு வழியாக,டி.ஜி.புதூர்,டி.என்பாளையம் கள்ளிப்பட்டி, அத்தாணி சென்று,இரவு பவானிசென்றடைந்தனர்பிரச்சார பய ணக் குழவினருக்கு வழிநெடுகிலும் திமுக நிர்வாகிகள், இளைஞர் அணி யினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.





Previous Post Next Post