நாங்குநேரி : நிருபரை குறிவைத்து நாட்டு வெடிகுண்டு வீசிய பிளஸ் 2 மாணவன் கைது.!


 நாங்குநேரி : நிருபரை குறிவைத்து நாட்டு வெடிகுண்டு வீசிய பிளஸ் 2  மாணவன் கைது.!


நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே தனியார் தொலைக்காட்சி நிரூபர் வைத்திருந்த ஜெராக்ஸ் கடை மீது 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்தவர் வானமாமலை (50). இவர் நாங்குநேரி நீதிமன்றம் மற்றும் தாலுகா அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். மேலும் தனியார் தொலைக்காட்சியின் நிரூபராக உள்ளார். இன்று காலையில் வழக்கம் போல் வானுமாமலை மற்றும் அவரது மனைவி ஆகியோர் 9 மணியளவில் கடையை திறந்துள்ளார். 


அப்போது மோட்டார் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வானமாமலை கடையை நோக்கி வீசி உள்ளனர். ஆனால், முதலில் வீசிய அந்த வெடிகுண்டு  வெடிக்கவில்லை. தொடர்ந்து இரண்டாவது குண்டை எடுத்து வீசும் போது கடையில் முன்பு விழுந்து வெடித்துள்ளது.


இதனைத் தொடர்ந்து மூன்றாவது குண்டை கீழே போட்டுவிட்டு அந்த அடையாளம் தெரியாத நபர் மோட்டார் பைக்கில் தப்பி ஓடி விட்டார். வெடிக்காமல் கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை நாட்டு வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நாங்குநேரி மருகால்குறிச்சியை சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன்தான் குண்டு வீசியதாக தெரியவந்துள்ளது.


சம்பவ இடத்திற்கு நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து வானுமாமலை வீட்டிற்கும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அந்த மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். 


தற்போது வெளியாகி உள்ள முதற்கட்ட தகவல்களின்படி, மாணவன் பயிலும் பள்ளியில் ஏற்பட்ட ஒரு சிறு மோதலை, நிரூபர் வானமாமலை செய்தியாக்கி உள்ளார். இதனால் வானமாமலை மீது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தற்போது அந்த மாணவன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவ இடத்தை நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து வானுமாமலை வீட்டிற்கும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.


மேலும் எதற்காக இந்த குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றது என போலீசார் அந்த மாணவனிடம் விசாரணை மேற்கொண்டதில், மாணவன் மீது அடிதடி வழக்கு ஒன்றில் எப்ஐஆர் போடப்பட்டுள்ளது அது செய்தியாக நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது. செய்தியாளர் வானமாமலை அந்த நாளிதழில் இதற்கு முன் பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் அந்த நாளிதழில் இருந்து தனியார் தொலைக்காட்சியில் பணியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் மாணவன் குறித்த செய்தி  நாளிதழில் இவர் தான் வெளியிட்டுள்ளார் என எண்ணி 12 ஆம் வகுப்பு மாணவன் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாங்குநேரியில் வீடு புகுந்து ஒரு மாணவரை சக பள்ளி மாணவர்கள் அரிவாளால் வெட்டிய வழக்கு அனைவரும் அறிந்தது. அந்த சம்பவத்திற்கும் இந்த நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவத்திற்கும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Previous Post Next Post