கல்லறை திருநாள் அனுசரிப்பு.
கிறிஸ்தவர்கள் மரணம் அடைகிறபோது பொதுவாக கல்லறைகளில் அடக்கம் செய்யப்படுகின்றனர். கல்லறைகளுக்குச் சென்று அவர்களை நினைவுகூர்வதற்கு வசதியாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந் தேதி கல்லறை திருநாள், சகல ஆத்துமாக்களின் திருநாள் என்ற பெயரில் கடைப்பிடிக்கப்படுகிறதுஇந்த தினத்தையொட்டி இன்று கல்லறை தோட்டங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த கல்லறை தோட்டங்கள் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன.
கல்லறைகளைப் பார்ப்பதற்கு மக்கள் இன்று மாலை வரை வந்து செல்வார்கள் என்பதால் விளக்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.கல்லறைகளை கழுவி, பூக்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி போன்றவற்றை ஏற்றி, ஜெபப் புத்தகத்தை படித்து, பாடல்களைப் பாடி, பின்னர் கண்களை மூடி அமைதியாக பிரார்த்தனை செய்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.