மகளிர் உரிமைத் தொகை 2ம் கட்டத்தை கனிமொழி கருணாநிதி எம்.பி.,தொடங்கி வைத்தார்

மகளிர் உரிமைத் தொகை 2ம் கட்டத்தை கனிமொழி கருணாநிதி எம்.பி.,தொடங்கி வைத்தார்


தூத்துக்குடியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை கனிமொழி கருணாநிதி எம்.பி.,தொடங்கி வைத்தார்.


குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 வழங்கும் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்" இரண்டாம் கட்டத்தை இன்று (10/11/2023) வெள்ளிக்கிழமை, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி - அறிஞர் அண்ணா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி., பயனாளிகளுக்கு கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் வங்கி பரிவர்த்தனை அட்டைகளை வழங்கி, விழாவில் சிறப்புரையாற்றினார்.


உடன், அமைச்சர்கள் பி.கீதாஜீவன்,அனிதா இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா, ஜி.வி. மார்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் லெட்சுமிபதி, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.    

Previous Post Next Post