தூத்துக்குடியில் 23-ந்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சியர் தகவல்.!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23.11.2023 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:-
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் "முத்து அரங்கத்தில்" வைத்து 2023-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான "விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" 23.11.2023 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.