கொடிவேரி அணையில் தண்ணீர் திறப்பு.. சுற்றுலா பயணிகள், பரிசல் சவாரிக்கு தடை...

 கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணைகட்டு வழியாக 2004 கன அடி உபரிநீர் வெளியேறி வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அணைக்கு வரவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது,


ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றானது கொடிவேரி அணை,இந்த அணையில் ஈரோடு மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும்,வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயனிகள் வருவது வழக்கம்,இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மற்றும் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த கன மழையால்  அணைக்கு வரும் உபரிநீர் பவானி ஆறு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது,  இதனால் கொடிவேரி அணை வழியாக 2004 கன அடி  உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது,

கொடிவேரி அணை வழியாக அதிக அளவு உபரி நீர் வெளியேறி வருவதால் சுற்றுலா பயனிகளின் நலன் கருதி சுற்றுலா பயனிகள் கொடிவேரி அணைகட்டுக்கு வரவும், பரிசல் பயனம் மேற்கொள்ளவும் பொதுபணித்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்,

செய்தியாளர்.எம்.மாரிச்சாமி 9080602161

Previous Post Next Post