சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் வேளச்சேரியில் ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் ஸ்கேட்டிங் தளம் அமைந்த மாநகராட்சி பூங்காவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
சென்னை வேளச்சேரி பெத்தேல் அவென்யூ, விஜிபி நகரில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் ஸ்கேட்டிங் தளம் அமைந்த மாநகராட்சி பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
ஸ்கேட்டிங் பயிற்சி பெரும் மாணவர்கள், சிலம்பாட்ட வீரர்கள் அமைச்சர் முன்பு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மாமன்ற உறுப்பினர் மேம்பட்ட நிதியிலிருந்து வேளச்சேரியில் 11 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு பேருந்து நிலையங்களை அமைச்சர் திறந்து வைத்தார்.