புதிய ஜவுளி கொள்கை, மின்சார மானியம் ரத்து உள்ளிட்டவைகளை கண்டித்து நாளை முதல் 20 நாட்களுக்கு திருப்பூர்,கோவை மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி நிறுத்தம் - ரூ.500 கோடி உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயம்.!


 புதிய ஜவுளி கொள்கை, மின்சார மானியம் ரத்து உள்ளிட்டவைகளை கண்டித்து நாளை முதல் 20 நாட்களுக்கு திருப்பூர்,கோவை மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி நிறுத்தம் - ரூ.500 கோடி உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயம்.!

புதிய ஜவுளி கொள்கை, மின்சார மானியம் ரத்து உள்ளிட்டவைகளை கண்டித்து நாளை முதல் நவம்பர் 25ஆம் தேதி வரை 20 நாட்களுக்கு திருப்பூர்,கோவை மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி நிறுத்தம்-திருப்பூர் கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

நாள் ஒன்றுக்கு 500 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயம்-தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் உற்பத்தி நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கும் அபாயம்.

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில்,
2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள்
வாயிலாக, தினசரி, ஒரு கோடி மீட்டர் காடா
துணிகள் உற்பத்தி ஆகின்றன. மின்கட்டண உயர்வு, தொழிலில் மந்தநிலை உட்பட காரணங்களில், வரும் 5ம் தேதி முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தது.

இது குறித்து, விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி கவுன்சில் துணைத்தலைவர் சக்திவேல் கூறியதாவது:

மின் கட்டண உயர்வு, பஞ்சு, நுால் விலை ஏற்ற இறக்கம் உள்ளிட்ட காரணங்களால், துணிகளின் அடக்க விலை கூடுகிறது.

இதுதவிர, மார்க்கெட் மந்த நிலை உள்ளிட்ட காரணங்களால், போட்டி நாடுகளுடன் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விற்பனையாகாமல் தேக்கமடைந்து வருவதால், ஏற்கனவே உற்பத்தி, 60 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. உற்பத்தியாகும் துணிகள் ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் காரணமாக, உற்பத்தியை நிறுத்துவது என தீர்மானித்துள்ளோம்.

இதனால், வரும், 5ம் தேதி முதல், திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி முழுமையாக நிறுத்தப்படும். நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின் அடுத்த கட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

Previous Post Next Post