துபாய் : குடும்பத்தினருக்கான விசிட்டிங் விசா : 18 வயதுக்குள் இருந்தால் விசா கட்டணம் இல்லை.!


 துபாய் : குடும்பத்தினருக்கான விசிட்டிங் விசா : 18 வயதுக்குள் இருந்தால் விசா கட்டணம் இல்லை.! 


குடும்பத்தினருடன் குழு விசிட்டிங் விசாவுக்கு விண்ணப்பித்தால், அதில் சிறார்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கட்டணமில்லா விசா வழங்கப்படுகிறது.


ஆனால் அவர்களின் பெற்றோர்களுக்கு பொதுவான விசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்படியான விண்ணப்பங்கள், சிறார்களின் தந்தை அல்லது தாயார் பெயரில் விண்ணப்பிக்கலாம்.


குடும்பத்துடன் விசிட் விசாவுக்கு விண்ணப்பித்தால், கட்டணத்தில் சலுகை பெற முடியும். மட்டுமின்றி, 18 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கையில் எந்த வரம்பும் விதிக்கப்படவில்லை.


மேலும், தந்தை அல்லது தாயார் மட்டுமே பிள்ளைகளுடன் பயணித்தாலும், சிறார்களுக்கான விசா கட்டணத்தில் சலுகை உண்டு. இந்த குடும்ப குழு விசிட் விசாவானது 30 நாட்கள் மற்றும் 60 நாட்களுக்கு செல்லுபடியாகும்.


இந்த விசாவில் ஐக்கிய அமீரகத்தில் இருந்துகொண்டே விசா நாட்களை நீட்டித்தும் கொள்ளலாம். பண்டிகை நாட்கள் நெருங்கி வருவதால், தற்போது நாளும் குடும்பத்தினருக்கான குழு விசா அனுமதிக்கப்பட்டு வருகிறது.


குடும்ப புகைப்படம் ஒன்றுடன் கடவுச்சீட்டுகளும் உரிய பயண ஏஜென்சியிடம் அளிக்க வேண்டும். சிறார்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது, ஆனால் பயண முகவர் சேவை மற்றும் காப்பீட்டு கட்டணங்கள் வசூலிக்கப்படும்.


இந்த விசாவானது 48 மணி நேரத்திற்குள் அனுமதிக்கப்படும். சேவை கட்டணங்கள் ஒவ்வொரு ஏஜென்சிக்கும் மாறுபடும். 30 நாட்களுக்கான விசிட்டிங் விசாவுக்கு பெற்றோர் ஒருவரிடம் இருந்து 350 முதல் 500 திர்ஹாம் கட்டணமாக வசூலிக்கப்படலாம்.


சிறார்களுக்கான சேவை மற்றும் காப்பீட்டு கட்டணங்கள் 80 முதல் 120 திர்ஹாம் வரையில் வசூலிக்கப்படலாம். அதே வேளை 60 நாட்களுக்கான விசிட்டிங் விசா என்றால் 500 முதல் 650 திர்ஹாம் வரையில் வசூலிக்கப்படலாம்.


சேவை மற்றும் காப்பீட்டு கட்டணங்கள் 130 முதல் 170 திர்ஹாம் வரையில் வசூலிக்க வாய்ப்புள்ளது. மேலும், விசா நாட்களை நாட்டைவிட்டு வெளியேறாமலே நீட்டித்துக் கொள்ளலாம்.


ஆனால் சிறார்களுக்கு முழு விசா கட்டணம் வசூலிக்கப்படும். 120 நாட்கள் வரையில் நாட்டைவிட்டு வெளியேறாமல் விசிட்டிங் விசா நாட்களை நீட்டித்துக் கொள்ளலாம் என்பது சிறப்பு.

Previous Post Next Post