வீரத்தீரச் செயல்புரிந்த 18 வயதுகுட்ப்பட்ட பெண் குழந்தைகளுக்கு ரூ. 1 லட்சத்திற்கான பரிசு தொகை பெறுவதற்கு தகுதியுடைய நபர்களிடம் கருத்துரு - தூத்துக்குடி ஆட்சியர் தகவல்.!
வீரத்தீரச் செயல்புரிந்த 18 வயதுகுட்ப்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி-24) பாராட்டு பத்திரமும், ரூபாய் ஒரு இலட்சத்திற்கான பரிசு தொகையும் பெறுவதற்கு தகுதியுடைய நபர்களிடம் கருத்துரு கோரப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி, வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் "பெண்குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண்குழந்தைகளும் 18 வயது வரை கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீரத்தீரச் செயல்புரிந்த 18 வயதுகுட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பின்வரும் தகுதிகளின் அடிப்படையில் தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி 24ம் தேதி) பாராட்டு பத்திரமும், ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு 2023-24 ஆண்டிற்கான பரிசு தொகை வழங்கும் பொருட்டு, தகுதியுடைய நபர்கள் கருத்துரு கோரப்படுகிறது.
தமிழகத்தில் வசிக்கும் 13 வயதிற்கு மேல் 18 வயதுக்குட்ட பெண்குழந்தைகள்(31 டிசம்பர் -ன்படி), பிற பெண்குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண்குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான / தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஒவியங்கள், கவிதைகள், மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிர்ப்புணாவை ஏற்படுத்தயிருத்தல் ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்ற சாதனை புரிந்தவர்களுக்கு இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இவ்விருதினை பெற உரிய முன்மொழிகளை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை மற்றும் குழந்தைகளுக்காக பணிபுரியும் சிறந்த தொண்டு நிறுவனங்கள் ஆகியோர்களிடம் விபரமறிந்து பரிந்துரைக்கலாம். தாங்கள் புரிந்த சாதனைகளை புத்தக வடிவ கருத்துரு தயார் செய்து, 24.11.2023 அன்று மாலை ஐந்து மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், கோரம்பள்ளம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வளாகம், தூத்துக்குடி - 628101 Ph.No-0461-2325606 என்ற அலுவலக முகவரியில் உடனடியாக சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட
ஆட்சித்தலைவர் லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.