சூலூரில் 108 தாய்மார்களுக்கு ஒரே அரங்கில் வளைகாப்பு வைபவம்
சூலூர் பகுதியில் இயங்கி வரும் அலையன்ஸ் மாவட்டம் பசுமை நிழல் அறக்கட்டளை மற்றும் தமிழ்ச்செல்வி அறக்கட்டளையின் சார்பில் 108 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்வு கலங்கள் பாதையில் அமைந்துள்ள திருமண அரங்கில் சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்ச்செல்வி அறக்கட்டளை நிறுவனதலைவர் சூ.வே. தர்மராஜ் வரவேற்பு உரையாற்றினார் . இந்நிகழ்விற்கு சாந்தி, செல்வராஜ் பசுமை நிழல் . விஜயகுமார், வெற்றிச்செல்வி, வசந்தம் சக்திவேல், இளமுருகு, அ .சுந்தர்ராஜன், சூலூர் பாலன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக எஸ். ஆர். எஸ் அறக்கட்டளை த. மன்னவன், வட்டார ஆரம்ப சுகாதார அலுவலர் உமர்பருக், சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பொறுப்பு மருத்துவர் நரேஷ் குமார், கண்ணம்பாளையம் பேரூராட்சி தலைவர் புஷ்பலதா ராஜகோபால், புதூரர் தங்கவேல், அலைஸ் மாவட்ட ஆளுநர் மயில்சாமி துணை ஆளுநர் செவ்வேல் மாவட்ட அமைச்சரவை செயலாளர் ஜான் பாஸ்கோ , சூ. ஆ.ஜெகநாதன், பேரூராட்சி துணைத் தலைவர் கணேஷ், எஸ். ஆர். டி .லோகநாதன் இன்ஜினியர் அசெஸின் தலைவர் குமரேசன் டாக்டர் கணேஷ் மணி, சுப்பிரமணியன் வெற்றி சந்தோஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மகளிர் மகப்பேறு சமுதாய சுகாதார செவிலியர்கள் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் ஓம் சக்தி வார வழிபாட்டு மன்ற தலைவர் முத்துக்குமார் குழுவினர் கலந்து கொண்டு சிறப்பாக நடத்தினர். நிகழ்ச்சிக்கு சூ.ப. சிவகுமார் நன்றி கூறினார். சூலூர் வட்டத்துக்கு உட்பட்ட பகுதியிலிருந்து 108 கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்ட வளைகாப்பு வைபவத்தில் தாய் வீட்டு சீதனமாக சேலை வளையல் சீர் தட்டு வழங்கப்பட்டு மாலை அணிவித்து மஞ்சள் குங்குமம் பூசி வளையல் விட்டு வளைகாப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதில் சூலூர் மட்டுமல்ல அது சுற்றியுள்ள கிராமத்தில் இருந்தும் வட இந்திய பெண்கள் உட்பட ஏராளமான தாய்மார்கள் தங்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தும் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அமுத ராகம் இசை குழுவினரின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்து வளைகாப்பு பாடல்கள்பாடி கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகிழ்ச்சி ஊட்டப்பட்டது நிகழ்ச்சிகளை பசுமை நிழல் விஜயகுமார் தொகுத்து வழங்கினார்.