10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - அட்டவணையை அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்.!


 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு -  அட்டவணையை அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்.!

10ஆம் வகுப்பு - பிப்ரவரி 23 - 29, 2024

11ஆம் வகுப்பு - பிப்ரவரி 19 - 24, 2024

12ஆம் வகுப்பு - பிப்ரவரி 12 - 17, 2024

தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 10, 11, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்னும் அட்டவணை இன்று வெளியாகி உள்ளது. அட்டவணையை சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  வெளியிட்டார்.

இதன்படி,10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 26 முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. மார்ச் 26ஆம் தேதி தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. மார்ச் 28ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத் தேர்வு நடைபெற உள்ளது.

12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. மார்ச் 1ஆம் தேதி தமிழ் மொழி பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. மார்ச் 5ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத் தேர்வு நடைபெறுகிறது. தொடர்ந்து மார்ச் 8ஆம் தேதி பல்வேறு வகையான பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன.

Previous Post Next Post