மார்ச் மாதத்தில் தமிழ்நாட்டில் 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்

சென்னை கோட்டூர்புரத்தில் பொதுத்தேர்வுக்கான அட்டவணைகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை பத்தாம் வகுப்பு ,11,12ம் வகுப்பு  பொதுத்தேர்வு -2023-2024 ஆண்டிற்கான தேர்வுக்கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  வெளியிடட்டார்.

இதன்படி,  12 ம் வகுப்பு பொதுத்தேர்வு 1.3.2024  முதல் தொடங்கி 22.3.2024வரை நடக்கிறது. தேர்வு முடிவுகள்  6.5-2024 தேதியில் வெளியிடப்படுகிறது.

11ம் வகுப்பு பொதுத்தேர்வு 4.3.2024 முதல் 14.5.2024 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

10 ம் வகுப்பு பொதுத்தேர்வு 26.3.2024 முதல் 8.4.2024 வரை நடைபெறும் என தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

10, 11, 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதிகள்!

• 10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 29ம் தேதி முடிவடைகிறது!

• 11ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 24ம் தேதி முடிவடைகிறது!

• 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 17ம் தேதி முடிவடைகிறது!

 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி வெளியாகிறது!

• 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 14ம் தேதி வெளியாகிறது!

• 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 6ம் தேதி வெளியாகிறது

Previous Post Next Post