ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் .பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதி, அய்யம்பாளையம், சித்தன் குட்டை பகுதியில் விவசாயிகள் வாழை மற்றும் மக்காச்சோளம் போன்ற பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் யானை, பலி,சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்கு கள் உள்ள நிலையில், வனவிலங்கு கள் அவ்வப்போது உணவை தேடி அருகாமையில் கிராமங்களுக்கு புகுந்து பயிர்களை சேதப்படுத்து வது வழக்கமான நிலையில். கடந்த இரு தினங்களுக்கு முன்பு அய்யம் பாளையம் பகுதியில்,ஒற்றை காட்டு யானை ( ஒரு கண் பார்வை மங்கிய நிலையில்) விவசாய விளை நிலங் களுக்குள்புகுந்துவாழைபயிர்களை நாசப்படுத்தியது .இதைஅறிந்தஊர் பொதுமக்கள்திரண்டு,வனத்துறை யினருக்கு தகவல் அளித்தனர். தக வலறிந்த விளாமுண்டி வனச் சரக த்தை சார்ந்த வனத்துறையினர்மற் றும் கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரக காவலர்கள்மற்றும்பொது மக்கள் யானையை வனப் பகுதிக் குள் விரட்ட முற்பட்டனர். இந்த நிலையில் யானைக்கு ஒரு கண் பார்வை செயலிழந்த நிலையில், டிராக்டர் வைத்தும், வனத்துறை ஈப்பு மூலம் ஒலி எழு ப்பி யானை யை வனக்காட்டு பகுதிக்குள் விர ட்டி விட்டனர்.
பொதுமக்கள், வனத்துறையினர் இந்த கிராமத்தின் பகுதியில் இரு ந்து யானையை அப்புறப்படுத்த படவேண்டும் என அரசுக்கு கோரிக் கை விடுத்தனர்.இதனடிப்படையில், ஒற்றை காட்டு யானையை மாற்று வனப்பகுதிக்கு கொண்டு செல்ல 2 கும்கி யானைகள்பயன்படத்தவனத் துறையினர் முடிவெடுத்து, ஒரு கும்கி யானையை அய்யம்பாளை யம் கிராம பகுதிக்கு வரவழைத்து உள்ளனர். மேலும் வால்பாறை பகுதியில் இருந்து, மேலும் ஒரு கும்கி யானையை கொண்டு வர உள்ளனர்.