மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அதிநவீன மின்னணு விளம்பர வாகனம் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மில்லர்புரத்தில் இன்று(26.10.2023) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மழைநீர் சேகரிப்பு தொடர்பான துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு அதனை பள்ளி மாணவர்களுக்கு ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நிர்வாகப் பொறியாளர் (த.கு.வ.வா) ராஜா, உதவி நிர்வாகப் பொறியாளர் (த.கு.வ.வா) ஜான் செல்வம், இளநிலை குடிநீர் பகுப்பாய்வாளர் வினோத்குமார், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் மரியஜோசப் அந்தோணி ஆகியோர் உடனிருந்தனர்.