காஸா மீது தரைப்படை தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!


 காஸா மீது தரைப்படை தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!


தரைப்படைகள் இரவோடுஇரவாக காஸாவிற்குள் நுழைந்து ஹமாசுக்கு எதிராக தாக்குதலை தீவிரப்படுத்தும் என்று இஸ்ரேலின் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகரி அதிகாரப்பூர்வ தகவல்.காஸா நகரமக்களை தெற்கு காஸா பகுதிக்கு செல்லவும் அறிவுறுத்தல்.


கடந்த சில வாரங்களாகவே, "ஹமாஸை ஒழித்துக் கட்டுவதே எங்கள் நோக்கம். அதற்காக, காஸாவுக்குள் தனது படைகள் நுழையும்" என இஸ்ரேல் கூறி வந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளது.



வெள்ளிக்கிழமை இரவு பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, இதனை இஸ்ரேல் செய்தித் தொடர்பாளர் டேனியல்கூறினார்.


பத்திரிகையாளர் சந்திப்பு தொடங்குவதற்கு முன், இந்திய நேரப்படி சுமார் 10.30 மணியளவில், தெற்கு இஸ்ரேலில் இருந்த பிபிசியின் குழுவினர் காஸாவில் இருந்து பலத்த சத்தம் கேட்டதாக கூறினர். அவர்கள் காஸாவிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் இருந்துள்ளனர்.


இந்தத் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தான் செய்ததாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திற்கு இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.


காஸாவில் என்ன நடக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ராக்கெட்டுகளை ஏவினோம் என்று ஹமாஸ் கூறியதாக ஏஎப்பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.


இதற்கிடையில், காஸாவின் பெரும்பாலான பகுதியில் இன்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் நடத்தப்படும் காஸா அரசு தெரிவித்துள்ளது.

Previous Post Next Post