"யெகோவாவின் சாட்சிகள் தேசவிரோதிகள் " கேரளா- களமசேரி குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று காவல் நிலையத்தில் சரணடைந்த டொமினிக் மார்ட்டின் என்ற நபர் வீடியோ வாக்குமூலம் வைரல்.!


 "யெகோவாவின் சாட்சிகள் தேசவிரோதிகள் " கேரளா- களமசேரி

குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று காவல் நிலையத்தில் சரணடைந்த டொமினிக் மார்ட்டின் என்ற நபர் வீடியோ வாக்குமூலம் வைரல்.!


கொச்சி கன்வென்ஷன் சென்டர்  குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று டொமினிக் மார்ட்டின் என்ற நபர் கொடகரா காவல் நிலையத்தில் சரணடைந்தார், முன்னதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் "யெகோவாவின் சாட்சிகள் என்ற கிருஸ்தவ அமைப்பு தேசவிரோதிகள், அவர்கள் மக்களை மூளைச்சலவை செய்கின்றனர் " என வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சரணடைந்த மார்ட்டின் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் அவரை 

விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். 


இன்று காலை கேரள மாநிலம் கொச்சி கன்வென்ஷன் சென்டரில்

கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் பிரார்த்தனைக் கூட்டத்திற்காக கூடியிருந்த இடத்தில் இந்த வெடிப்புகள் நிகழ்ந்தன. குண்டுவெடிப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, போலீஸ் காவலில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளில் இருந்து விலகிய உறுப்பினரான டொமினிக் மார்ட்டின் சமூக ஊடகங்களில் வீடியோவை வெளியிட்டார், வீடியோவில், டோமினிக், "குண்டுவெடிப்புக்கு நான் பொறுப்பேற்கிறேன். நான் ஏன் அதைச் செய்தேன் என்பதை உங்களுக்கு உணர்த்தவே இந்த வீடியோவை வெளியிடுகிறேன். கடந்த 16 வருடங்களாக நான் யெகோவாவின் சாட்சிகளில் உறுப்பினராக இருந்தேன். நாளாக ஆக அவர்களின் நிலைப்பாடு தேசவிரோதமானது என்பதை உணர்ந்து அதை அவர்கள் சரி செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன்.ஆனால் அவர்கள் அதற்குத் தயாராக இல்லை.இது ஒரு தவறான சித்தாந்தம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவர்கள் குழந்தைகளின் மூளையில் விஷத்தை புகுத்துகிறார்கள். வேறு ஒரு குழந்தைகளிடமிருந்து ஒரு இனிப்பைக் கூட எடுத்துக் கொள்ளக் கூடாது என கூறுகின்றனர்.தேசிய கீதத்தைப் பாடக் கூடாது  பாதுகாப்பு பணியில் சேர வேண்டாம் என்று குழந்தைகளை கேட்டுக்கொள்கிறார்கள்.உலக மக்கள் அனைவரும் அழிந்து போவார்கள், அவர்கள் மட்டுமே வாழ்வார்கள் என்று போதிக்கிறார்கள்.அழிவுக்காக ஏங்கும் மக்களை நாம் என்ன செய்ய வேண்டும். என்னால் இதற்க்கு தீர்வு காண முடியவில்லை, இந்த எண்ணம் நாட்டுக்கு ஆபத்தானது என்பதை உணர்ந்து, முடிவு எடுத்தேன், யெகோவாவின் சாட்சிகளே, உங்கள் சித்தாந்தம் தவறு, மற்றவர்களுக்கு உதவுங்கள், பிறரை மதிக்க வேண்டும், கேரள வெள்ளத்தின் போது, ​​நீங்கள்  உங்கள் உறுப்பினர்களின் வீடுகளுக்கு மட்டுமே உதவி செய்தீர்கள். இந்த தவறான சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என பேசியுள்ளார்.

Previous Post Next Post