ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த டி ஜி புதூரில் உள்ள சமு தாய கூடத்தில், கைத்தறி துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில், கைத்தறி நெசவாளர்களு க்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.டி ஜி புதூர், சதுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற் பட்ட கைத்தறி நெசவாளர் குடும்பத் தினர் வசித்து வருகின்றனர் அவர் களின் குடும்பத்தினர் நல்வாழ்வி னை கருத்தில் கொண்டு, கைத்தறி நெசவாளர்களை தொற்று நோய் களில் இருந்து பாதுகாக்கவும்,அவர் களுக்கு தேவையான, நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வருடாந்திர மருத்துவ பரிசோதனைகளை மேற் கொள்ள, தமிழ் நாடு அரசு கைத்தறி துறையும்,,பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறைகள் இணைந்து மாவட்ட அளவிலான நெசவாளர்களுக்கான சிறப்பு மருத் துவ முகாமினை நடத்தியது.இந்த முகாமினை ஈரோடு மாவட்ட கைத் தறி துறை உதவி இயக்குநர் தமிழ் செல்வன் குத்துவிளக்கு ஏற்றி, துவ க்கி வைத்தார்.இம்முகாமில், மருத் துவ குழுவினர் பொது மருத்துவம், சர்க்கரை நோய், கண்பரிசோதனை, தோல் நோய் சிகிச்சை, எலும்பு சிகி ச்சை,, கர்ப்பவாய் புற்றுநோய்,இருத யம் சபந்தப்பட்ட நோய்,சித்த மருத் துவம் போன்ற துறைகளில் பரி சோதனைகள் மேற்கொள்ளப் பட் டது. மேலும் நோயாளிகளின், நோய் தன்மைக்கு ஏற்ப இலவசமாகஇசிஜி ,எக்ஸ்ரே,ஸ்கேன்,எண்டோஸ்கோபி மற்றும் ரத்த பரிசோதனைகளும் மேற் கொள்ளப்பட்டது இந்த முகா மில் டி.ஜி.புதூர், கே.என்.பாளையம் சதுமுகை, பகுதியை சேர்ந்த 650 க் கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு பயன் பெற்றனர்.
இந்த முகாமில் 75க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் ஈடுபட்டனர். இந்த முகாமில் பெரிய கொடிவேரி பேரூராட்சி மன்றத்தலைவர் தமிழ் மகன் சிவா, சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஐ எ தேவராஜ், திமுக மாவட்ட பிரதிநிதி ஆறுச்சாமி, சத்தி வடக்கு ஒன்றிய திமுக மாணவரணி செயலாாளர் திருமூர்த்தி. டி.ஜி.புதூர், கே.என். பாளையம், சதுமுகை பகுதி நெசவா ளர் கூட்டுறவு சங்க மேலாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்ட னர்.முகாமிற்கான ஏற்பாடுகளை, கைத்தறி நெசவாாளர் கூட்டுறவு சங்க மேலாளர் தாமோதிரன் உள் ளிட்டோர் செய்திருந்தனர்.