புதிய திராவிட கழகம் மற்றும் கொங்கு நாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் நல சங்கம் நடத்தும் ஐந்தாவது மாநில மாநாட்டின் ஆலோசனை கூட்டம்....

  புதிய திராவிட கழகம் மற்றும் கொங்கு நாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் நல சங்கம் நடத்தும் ஐந்தாவது மாநில மாநாட்டின் ஆலோசனை கூட்டம் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல் ஆய்வு கூட்டம், பெயர்பலகை திறப்பு விழா, கொடியேற்று விழா,  வள்ளிகும்மி அரங்கேற்றம் ஆகிய ஐம்பெரும் விழா குமாரபாளையம் மாவட்டம் ஶ்ரீ லட்சுமி மஹாலில் நடைபெற்றது.

                                 

  

 இதில் விவசாயபெருமக்கள் வாழும் பகுதியான புதுப்பாளையம், பெதக்காட்டூர் கிராமபுறத்தில் அமைய தேர்வு செய்யப்பட்ட சாய சுத்திகரிப்பு நிலையங்களை விவசாய பயன்பாடு அல்லாத வேறு பகுதியை தேர்வு செய்ய வேண்டும்.

மேட்டூர் கிழகரை வாய்க்கால் பாசனத்தை அடிப்படையாக கொண்டு வாழும் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி விவசாய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வருடம் தோறும் பாசன நீர் திறக்கப்பட வேண்டும்.



பள்ளிபாளைம், ஆவத்திபாளையம் பகுதிகளில் முறையான சுத்திகரிப்புநிலையம் இல்லாமல் செயல்படும் சாய ஆலைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.


 பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது. 





 மாநாட்டின் அழைப்பிதழை புதிய திராவிட கழகத்தின் நிர்வாகிகளுக்கு கொங்கு தளபதியார் கே.எஸ் .ராஜ்கவுண்டர்  வழங்கி  தலைமை தாங்கினார்.



     இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் காடையார் சரவணன்  முன்னிலை வகித்தார். மேலும் பள்ளிபாளைம் ஒன்றிய செயலாளர்Gp.கௌதம் அவர்கள் வரவேற்பு உரை  வழங்கினார்.மாவட்ட தலைவர் திரு M.காசிலிங்கம்  கருத்துரை வழங்கினார்.மாவட்ட துணை செயலாளர் திரு. குணசேகரன்   நன்றியுரை ஆற்றினார். மேலும் ஈரோடு மாவட்ட துணை செயலாளர் சதீஷ்குமார், ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் சக்தி கணேசன்,கரூர் மாவட்ட செயலாளர் பசுவை சந்தோஷ், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் ராஜேஷ்,பெருந்துறை ஒன்றிய செயலாளர் கொங்கு ராம், கரூர் நகர செயலாளர் அருள்கவுண்டர் ஆகியோர் உரையாற்றினர். 


Boobalan

Tamilanjal Reporter

Previous Post Next Post