தூத்துக்குடி : பதவியை ராஜினாமா செய்த திமுக பெண் கவுன்சிலர்!


 தூத்துக்குடி : பதவியை ராஜினாமா செய்த திமுக பெண் கவுன்சிலர்!


அரசு வேலை காரணமாக தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் திமுக பெண் கவுன்சிலர் நர்மதா தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து ராஜினாமா செய்த கவுன்சிலர் ஆர் நர்மதாவிடம் கேட்டபோது "எனக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருப்பதால் எனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று தெரிவித்தார்.

 

இந்நிலையில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்க்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன், பொன்மணி, வசந்தா, ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் ஆஸ்கார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் 


கூட்டத்தில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய 12வது வார்டு திமுக கவுன்சிலர் ஆர். நர்மதா அளித்த ராஜினாமா ஏற்றுக்கொள்ளப் பட்டு தீர்மானம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும் என ஒன்றிய குழு தலைவர் தெரிவித்தார்.

Previous Post Next Post