காசா நகரத்தின் இணைய தொலைதொடர்பு கேபிள் துண்டிப்பு.
இஸ்ரேலிய வான்வழி தாக்குதலால் காசா நகரத்தின் இணைய கேபிள் அமைப்பு முற்றிலும் அறுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காசாவிற்குள் இணையம் மற்றும் தொலை தொடர்பு சேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது. தங்களின் பணியாளர்கள் ஊழியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என ஐநாவும், செஞ்சிலுவை சங்கமும் தெரிவித்துள்ளன.