பவானிசாகர் அருகே,லாரி ஓட்டுநர் தூங்கியதால், சரக்கு லாரி கவிழ்ந்து விடத்து-ஓட்டுநர், கிளினர் அதிர்ஷ்டவசமாய் உயிர் தப்பினர்.


நீலகிரிமாவட்டம்.ஊட்டி.ஆடசோலை புது மந்துவைச் சேர்ந்த, சிக்காகோட வின் மகன் மனோ குமார் (வயது 30) லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகி றார். இவர் நேற்று பெங்களூரில் இருந்து,சரக்கு லாரியில், கோவை க்கு,  இரும்பு ஸ்கிராப் பாரம் ஏற்றி. பண்ணாரி சோதனை சாவடி வழி யாக. கோவைக்கு வந்து கொண்டி ருந்த போது, இன்று காலை சுமார் 10..25 மணிக்கு, பவானிசாகர் கொத் த மங்கலம் அருகே வரும்போது, தூக்க கலக்கத்தில், ஓட்டுநர் தூங்கி விட்டதால்.பாரம்ஏற்றியலாரி சாலை யின் ஓரத்தில் இடதுபுறத்தில்,கவிழ் ந்து விபத்துக்குள்ளானது. விபத் தில், அதிர்ஷ்ட வசமாய், லாரி ஓட்டு நர் மனோ குமார் மற்றும் கிளினர் ஆகியோர் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினர். விபத்து குறித்து தகவல் அறிந்த, பவானிசாகர் போலீசார், விபத்து குறித்து விசாரனை மேற்கொண்டு.வருகின்றனர்.


Previous Post Next Post